ராதாகிருஷ்ணனால் சீரழிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
காமக் கொடூர சுங்கத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணனால் சீரழிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட ஆனந்தி, வேண்டாமணி, பிரேமா என்ற கிருபா ஆகிய 3 சிறுமிகளும் புரசைவாக்கம் கெல்லீஸ்பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்களது வறுமையான குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், அந்த நிலையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத்திரும்ப உதவும் வகையிலும், தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், 3 சிறுமிகளுக்கும் தலா ரூ. 1 லட்சம்நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருது வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தொகை சிறுமிகளின் பெயரில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைகல்வித் தேவை, வாழ்க்கைச் செலவுகளுக்கு சிறுமிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். 18 வயது நிரம்பியவுடன், இந்தத் தொகைசிறுமிகளிடம் வழங்கப்படும்.
3 சிறுமிகளும் தொடர்ந்து கெல்லீஸ் அரசு குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications