கும்மிடிப்பூண்டி: தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்

Subscribe to Oneindia Tamil

கும்மிடிப்பூண்டி:

கோவில் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி கும்மிடிப்பூண்டி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக, இத்தொகுதிக்குட்பட்டவழுதலம்பேடு காலனி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கிராமம் வழுதலம்பேடு. இந்தக் கிராமத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்வழுதலம்பேடு காலனி உள்ளது. காலனியில் வசிப்பவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோவில் உள்ளது. இரு கிராம மக்களும் இந்தக் கோவிலில் வழிபட்டு வந்தனர்.ஆனாலும் கோவில் தங்களுக்குத்தான் சொந்தம் என்று வழுதலம்பேடு கிராமத்தினர் கூறியதால், காலனி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும், காலனி மக்களை வழுதலம்பேடு கிராமத்தினர் அடிக்கடி அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதாககூறப்படுகிறது.

இந் நிலையில் கோவில் பிரச்சினை பெரிதாகி, 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் மூடப்பட்டது. மேலும், கடந்த எம்.பிதேர்தலின்போது ஓட்டுப் போடச் சென்ற காலனி மக்களை, வழுதலம்பேடு கிராமத்தினர் அவமானப்படுத்தி தகராறு செய்ததில்அது பெரும் பிரச்சினை ஆனது.

இந்தச் சூழ்நிலையில், தற்போது நடைபெறவுள்ள கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலைப் பயன்படுத்தி கோவில் பிரச்சினைக்கும்மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழுதலம்பேடு காலனி கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, தங்களது கோவில் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான் ஓட்டுப் போடுவோம். இல்லாவிட்டால் தேர்தலைப்புறக்கணிப்போம் என்று காலனி கிராமத்தினர் அறிவித்துள்ளனர்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி நிலைதான் இங்கும் நிலவுகிறது. உயர் ஜாதிக்காரர்கள் எங்களை மிகவும் அவமானப்படுத்துகின்றனர்,பெண்களின் ஜாக்கெட்டுகளை கிழித்து ரகளை செய்கிறார்கள். எட்டியம்மன் கோவிலில் நாங்கள் சாமி கும்பிட்டால் கோவில்புனிதம் கெட்டு விடும் என்று கூறி 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை பூட்டி விட்டார்கள்.

ஓட்டுப் போடவும் நாங்கள் வழுதலம்பேடு கிராமத்திற்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு நாங்கள் போக மாட்டோம்.எங்களுக்கென்று தனி வாக்குச் சாவடி அமைக்கப்பட வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் தேர்தலில் யாரும்ஓட்டுப் போட மாட்டோம் என்று காலனி மக்கள் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+