கே.ஏ.எஸ். சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பிரபல லாட்டரிச் சீட்டு அதிபர் கே.ஏ.எஸ்.சேகரின் ஜாமீன் மனு மதுரை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சேகர் சார்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனு நீதிபதி அய்யாச்சாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் சேகருக்கு ஜாமீன் தரக் கூடாதுஎன்று ஆட்சேபனை தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி அய்யாச்சாமி, சேகரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications