சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர் மர்ம சாவு: கொல்லப்பட்டாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள பிரபல சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் 7வதுமாடியிலிருந்து கீழே விழுந்து பலியானார். அவர் தள்ளி விடப்பட்டுக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் மளிகைப் பிரிவில் காசாளராகப்பணியாற்றி வந்தவர் ஹரிகிருஷ்ணன். இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதியில், சக ஊழியர்களோடுதங்கி வேலை பார்த்து வந்தார்.

இந் நிலையில் நேற்று இரவு ஹரிகிருஷ்ணன், நிறுவனத்தின் 7வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார். அவர் தவறிவிழுந்தாரா அல்லது யாரேனும் அவரைத் தள்ளி விட்டார்களா என்பது தெரியவில்லை.

இது குறித்து அவருடன் வேலை பார்க்கும் 6 ஊழியர்களை மாம்பலம் போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கும் முன்பும் இதே போல இந்த நிறுவனத்தில் பல ஊழியர்கள் மர்மமாக இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கும் முன்பும் இதே போல இந்த நிறுவனத்தில் பல ஊழியர்கள் மர்மமாக இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல இங்குவரும் வாடிக்கையாளர்களிடமும் இந் நிறுவன ஊழியர்கள் பல தடவை முறைகேடாக நடந்த சம்பவங்களும் உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+