சங்கரராமன் வழக்கு: தடை கோரி அப்பு, கதிரவன் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி அப்புவும், கதிரவனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து அப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், சங்கரராமன் கொலை வழக்கில் 1843 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் குறுகிய காலத்திற்குள் ரவிசுப்ரமணியத்திடம் குறுக்குவிசாரணை நடைபெற்றது.

குற்றப்பத்திரிக்கை அதிக பக்கங்கள் கொண்டது என்பதால் அதை படித்து முடித்து, புரிந்து கொள்ள முடியவில்லை. எனவேரவிசுப்ரமணியத்தை சரியாக குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை.

மேலும், எனது தாய் மொழியான தெலுங்கில் குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையும்ஏற்கப்படவில்லை. இதன் மூலம் எனது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் வழக்கு தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வமான எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தால் அதுநியாயமானதாக, நேர்மையானதாக இருக்க முடியாது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.

இதேபோல கதிரவன் தாக்கல் செய்திருந்த மனுவில், ரவிசுப்ரமணியத்தின் வாக்குமூல நகலும், நான் அளித்த வாக்கு மூலத்தின்நகலும் எனக்கு தரப்படவில்லை. இதனால் ரவிசுப்ரமணியத்தை சரியான முறையில் குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை.இதன் மூலம் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது இயற்கை விதிக்கு புறம்பானது.

எனவே வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தால் அது நியாயமான முறையில் நடக்காது என்று அஞ்சுகிறேன். எனவேவிசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இருவரது மனுக்களும் நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்கள் மீதான அடுத்த கட்டவிசாரணையை மே 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+