பள்ளியின் இரும்பு கேட் விழுந்து 4 மாணவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பள்ளியின் இரும்பு கேட் விழுந்ததில், அதில் சிக்கி 4 மாணவர்கள் இறந்தனர்.அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் என்ற இடத்தில், கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீராமா தொடக்கப் பள்ளி என்ற தனியார்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடைவேளை விடப்பட்டது.

அப்போது பள்ளி மாணவர்கள், சிலர் நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டில் ஏறி ஊஞ்சலாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.இரும்பு கேட்டின் இருபுறம் இருந்த சுற்றுச்சுவர் மிகவும் பலவீனமாக இருந்தது. இந் நிலையில் மாணவர்கள் கேட்டைப் பிடித்துஆட்டி விளையாடியதால் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இரும்பு கேட்டும் கீழே விழுந்தது.

இதில் சில மாணவர்கள் இரும்பு கேட் மற்றும் சுவரின் அடியில் சிக்கிக் காண்டனர். இதில் கருப்புசாமி, மாயப்பன், காளிராஜன்ஆகிய 3 மாணவர்களும் (மூவருக்கும் வயது 7 ) சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

15 மாணவர்கள் காயமடைந்து, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சின்னப்பன் என்ற மாணவன், நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல்இறந்தான்.

மாவட்ட ஆட்சித் தலைவர் முகம்மது அஸ்லம், காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அதிகாரி வேலுச்சாமிஉள்ளிட்டோர் சம்பவம் நடந்த பள்ளியைப் பார்வையிட்டனர். சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜெ. நிதியுதவி:

இந் நிலையில், பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் ராமாதொடக்கப் பள்ளியின் நுழைவாயில் இரும்பு கேட் மற்றும் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் இறந்தனர், 8 பேர்படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி கேட்டு முதல்வர் ஜெயலலிதா வேதனை அடைந்தார்.

மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெவித்துள்ள முதல்வர், பலியான மாணவர்களின் குடும்பங்களுக்குதலா ரூ. 50,000 நிதியை வழங்கவும், படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு தலா ரூ. 15,000 நிதியும், லேசான காயம் அடைந்தமாணவர்களுக்கு தலா ரூ. 6000 நிதியுதவி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+