இடைத்தேர்தல்: ஜெயலலிதா நாளை பிரசாரம் தொடங்குகிறார்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில் ஜெயலலிதா நாளை முதல் பிரசாரம் தொடங்குகிறார். நாளை அவர், 10 இடங்களில் அதிமுகவேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக கட்சியின்மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
நாளை முதல் காஞ்சிபுரம் தொகுதியில் ஜெயலலிதா பிரசாரத்தை தொடங்குகிறார். நாளை மாலை 4 மணியளவில்செனனையிலிருந்து புறப்படும் அவர், 5 மணியளவில் வெள்ளை கேட் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்துஇரவு 10 மணி வரை 14 ஊர்களில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார்.
நாளை 10 இடங்களில் மைதிலி திருநாவுக்கரசை ஆதரித்து பேசுகிறார். நாளை மறுநாள் கன்னிகாபுரத்தில் தொடங்கி கன்னடியன்குடிசை வரை ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
5ம் தேதி ஓய்வுக்குப் பிறகு 6ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட தானா குளம் முதல் ஊத்துக்கோட்டை வரை 10இடங்களில் பேசுகிறார். 7ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாணியன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை பிரசாரம்செய்கிறார்.
பிறகு 9ம் தேதி காஞ்சிபுரம் தொகுதியிலும், 10ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்து தனது தேர்தல்சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
ஜெயலலிதா வருகையையொட்டி காஞ்சிபுரம் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில்துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
