மலேசியாவில் இறந்த வாலிபரின் உடலை கொண்டு வர ஜெ. உதவி
சென்னை:
மலேசியாவில் மரணமடைந்த கடலூர் மாவட்ட வாலிபரின் உடலை தமிழகத்திற்குக் கொண்டு வர, அக் குடும்பத்துக்கு ரூ. 50,000நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமிஅலைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னியம்மாள் என்பவரின் குடும்பத்திற்கு தமிழக அரசுஉரிய நிவாரண உதவிகளை செய்தது. இதன் மூலம் அவர்கள் மறுவாழ்வைத் தொடங்கினார்கள்.
சுனாமி பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீண்டு புதுவாழ்வு தொடங்கியுள்ள நிலையில் தனது மகனை கன்னியம்மாள்இழந்துள்ளது அறிந்து முதல்வர் ஜெயலலிதா வேதனையுற்றார்.
அவரது மகனின் சடலத்தை மலேசியாவிலிருந்து கொண்டு வர உதவிடும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்துரூ. 50,000 வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications