ஒரே நாளில் 2 பெண்களுக்குக் தாலி கட்டியவர் கைது!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நெல்லை மாவட்டம் ஊத்துமலையில், ஒரே நாளில் 2 பெண்களுக்குத் தாலி கட்டிய பலே நபரை போலீஸார் கைது செய்து சிறையில்அடைத்தனர்.

ஊத்துமலை உச்சி மாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ். இவர் தனது கடைக்கு அருகே வசிக்கும் கோட்டைச்சாமிஎன்பவரின் மகள் கலாவை காதலித்தார். ஆனால் கலா அதை ஏற்க மறுத்து விட்டார்.

இந் நிலையில் முருகேஷுக்கு அவரது வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். அந்தப் பெண்ணுக்கும், முருகேஷுக்கும் உள்ளூரில் உள்ளஅம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. வேண்டா வெறுப்பாக அப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்முருகேஷ்.

திருமணம் செய்து கொண்டாலும் கலாவை மறக்க முடியவில்லை முருகேஷால். திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் அவர் இருப்புகொள்ள முடியாமல் கலா வீட்டுக்குப் போனார். அங்கு யாரும் எதிர்பாராத வகையில், கையில் இருந்த தாலியை எடுத்து கலா கழுத்தில்கட்டினார்.

அதிர்ந்து போன கலா, உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் முருகேஷைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர். முருகேஷின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+