பழ.நெடுமாறன் மீதான பொடா வழக்கு ரத்து: மறு ஆய்வுக் கமிட்டி அதிரடி உத்தரவு
டெல்லி:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மீது பொடா வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எந்த அடிப்படை ஆதாரமும்இல்லை என பொடா மறு ஆய்வுக் குழு கூறியுள்ளது. அவர் பொடாவில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யவும் தமிழக அரசுக்குஉத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி பழ.நெடுமாறன் மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பொடாவழக்குப் பதிவு செய்தது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.
தாங்கள் பொடாவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஐவரும் பொடா மறு ஆய்வுக் குழுவிடம் மனு செய்திருந்தனர். இதைநீண்ட காலமாக விசாரித்து வந்த மறு ஆய்வுக் குழு இன்று நெடுமாறன் உள்ளிட்ட நால்வரையும் பொடா வழக்கில் இருந்துவிடுவிக்க உத்தரவிட்டது.
இவர்கள் மீது பொடாவில் நடவடிக்கை எடுக்க எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று தமிழக அரசின் முகத்தில்அறைந்துள்ளது பொடா மறு ஆய்வுக் குழு.
2002ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி இரவில் நெடுமாறனும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.
புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அதே ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், 8 மதிமுகபிரமுகர்களும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.
இதில் வைகோவையும் மதிமுகவினரையும் பொடா மறு ஆய்வுக் குழு விடுதலை செய்ய உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications