For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெகா பிராடு ஆதிசேகவன் கைது: ரூ. 50 கோடி மோசடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Aathikesavanதனக்குத் தானே விளம்பரங்கள் செய்து கொண்டு திடீரென தமிழகத்தின் விவிஐபியாக உருவான பிராடு ஆதிகேசவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி மன்னனை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.

என்.ஆர்.ஐகளிடம் இருந்து கடன் வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ. 50 கோடி வரை மோசடி செய்துள்ள இவரை மத்தியகுற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து போர்ட் எண்டவெர் உள்ளிட்ட 4 லேட்டஸ்ட் மாடல் கார்கள், 100 தங்க நாணயங்கள், 400 பவுன் நகை, 10வங்கி பாஸ் புக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரை அடுத்த சிறிய கிராமத்தைச் சேர்ந்தது இந்த பிராடு ஆதிகேசவன். சட்டப் படிப்பைமுடித்ததாகக் கூறிக் கொண்டவர்.

பியூனாக இருந்தவர்...

ஆரம்பத்தில் சென்னையில் ஸ்டேட் வங்கியில் பியூனாக இருந்தவர். திடீரென வேலையை விட்டு விலகிய ஆதி, பல விதமானமோசடிகளில் இறங்கினார். எல்லாமே நிதி மோடிகள் தான்.

பத்திரிக்கைகளில் தனக்குத் தானே பிறரது பெயரில் மெகா சைஸ் விளம்பரங்கள் தந்து கொண்டவர். பெரிய போஸ்டர்கள் அடித்துஊர் முழுவதும் ஒட்வதும் வாடிக்கை.

கோயில் கும்பாபிஷேகமா, நோட்டு புக்ஸ் வாங்க வேண்டுமா.. ஆதியைக் கேட்டால் போதும் பணம் கொட்டும். மேலும் லோக்கல்அரசியல்வாதிகள், தாதா கும்பல்களுக்கும் உரிய கப்பம் கட்டி அவர்களை தனக்கு ஆதரவாக வைத்திருந்தார்.

Aathikesavans house

கிலோ கணக்கில் உடலில் நகை:

மெண்டல் மாதிரி உடல் முழுவதும் கிலோ கணக்கில் எடை கொண்ட நகைகள் அணிந்திருப்பது இவர் ஸ்டைல். தாமரைக்கனிக்கேஅல்வா கொடுக்கும் வகையில் சாப்பாட்டு தட்டு மாதிரியான சைஸில் மோதிரங்கள் அணிந்திருப்பார்.

கழுத்தில் நாய் செயின் மாதிரி மொக்கையாக தங்கச் சங்கிலி, இதன் எடை 100 பவுன் என்கிறார்கள். சங்கிலியில் கிரானைட் கல்மாதிரி பெரிய சைசில் விலை மதிப்பு கற்கள் கொண்ட டாலர், இதைத் தவிர கால் கிலோ எடை கொண்ட பிரேஸ்லெட்களும்அணிந்து கொண்டு, எப்போதும் பட்டு வேட்டி, சட்டையில் வலம் வருவார்.

ஆதிகேசவனின் கெட்டப் மற்றும் கேரக்டரால் அந்தப் பகுதி மக்கள் அவரை மிகப் பெரிய மனிதராக கருதி வாயை பிளந்து பார்க்கஆரம்பித்தனர்.

சாமிக்கு வைர கிரீடம்:

கடந்த ஆண்டு திருப்பதியில் ஏழுமலையானுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வைர கிரீடம் அளித்து தனது செல்வ வளத்தைநிரூபித்தார் ஆதி.

சமீபத்தில் இவர் மீது, கொல்கத்தாவைச் சேர்ந்த ராஜேந்திர மோகன் தத்தா என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். அதில்,ஆதிகேசவன் என்பவர் வெளிநாட்டு வாழ் இந்தியரிடம் இருந்து பணத்தை பெற்று கடன் தருவதாக விளம்பரம் செய்தார். அதைநம்பி 13 பேரிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்தேன்.

Aathikesavans Pooja room2 தொழிலதிபர்கள் புகார்:

17 பேருக்கும் ரூ. 31 கோடி வரை கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி, ரூ. 1.11 கோடியை அட்வான்ஸ் கமிஷனாகப் பெற்றுக்கொண்டார். ஆனால், கடனும் தரவில்லை, கொடுத்த பணத்தையும் தரவில்லை என்று புகாரில் கூறியிருந்தார்.

இதே போல, நாசிக்கைச் சேர்ந்த ஆஷிஷ் விஜய்சிங்பர்தேசி என்பவரும் புகார் கொடுத்தார்.

அதில், நான் வெளிநாடுகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்து வருகிறேன். வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய எனக்குப் பணம்தேவைப்பட்டது. அப்போதுதான் ஆதிகேசவன் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்தேன்.

வியாபார அபிவிருத்திக்கு பணம் தேவைப்படுவோர் தனது மும்பை ஏஜென்ட் கண்டேல்வால் என்பவரை சந்திக்குமாறு தனதுவிளம்பரத்தில் ஆதிகேசவன் கூறியிருந்தார். இதையடுத்து கண்டேல்வாலை நான் சந்தித்தேன். அவர் மூலம் கடந்த 1997ம் ஆண்டுடிசம்பர் மாதம் ஆதிகேசவனை சந்தித்தேன்.

எனது வியாபார அபிவிருத்திக்காக 20 கோடி கடன் தொகை பெற்றுத் தருவதாக ஆதிகேசவன் உறுதியளித்தார். இதற்கானகமிஷனாக ரூ. 83 லட்சம் தொகையை உடனடியாகத் தருமாறும் கேட்டார். நானும் அந்தக் கமிஷன் தொகையைக் கொடுத்தேன்.

வாஜ்பாய்.. அத்வானி:

வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களை தனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியதால் அதை நம்பி நான் பணத்தைக்கொடுத்து விட்டேன். மேலும் ரிசர்வ் வங்கி தனக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பணத்தைப் பெற்றுக் கொடுக்க அனுமதிஅளித்தள்ளதாக கூறி ஒரு கடிதத்தையும் என்னிடம் காண்பித்தார். ஆனால் அது போலி என்பது பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.

கமிஷன் மட்டும் பெற்றுக் கொண்டு கடன் தொகையைத் தராமல் ஏமாற்றிய ஆதிகேசவனை சந்தித்து பணத்தைப் பெற சென்னைவந்தபோது அடியாட்களை வைத்து அடித்து விரட்டினார். இதுகுறித்து மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தேன்.

ஜாதி.. பொய் கேஸ்:

ஆனால், தன்னை ஜாதியைச் சொல்லித் திட்டி அவமானப்படுத்தியதாக என் மீதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஆதி.

கடந்த ஒரு வருடமாக அவரிடமிருந்து பணத்தைப் பெற படாதபாடு பட்டு வந்தேன். கடந்த 3 மாதமாக சென்னையில் தங்கிஇதுதொடர்பாக சட்ட நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்து வந்தேன்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆதிகேசவன் இப்படி பல கோடி ரூபாய்களைமோசடி செய்துள்ளார் பெங்களூரில் சுரேஷ்என்பவர் ஆதிகேசவனின் ஏஜென்டாக உள்ளார். வட மாநிலங்களிலும் இவருக்கு ஏராளமான ஏஜென்டுகள் உள்ளனர் என்றுகூறியுள்ளார் பர்தேஸி.

Aathikesavans carகதறி அழுத தொழிலதிபர்:

மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை நேரில் சந்தித்து புகார் கொடுத்த பர்தேஸி கதறி அழுததாகவும் தெரிகிறது. இதையடுத்துநடவடிக்கை எடுக்க நடராஜ் உத்தரவிட்டார்.

ரூ. 30 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதால், இந்த விவகாரம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இரு புகார்களையும் கடந்த 29ம் தேதி பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார், ஆதிகேசவனைக் கைது செய்யதிட்டமிட்டனர். அவரது வீட்டுக்கு மாறுவேடத்தில் போலீஸார் சென்றனர்.

அவர் மரக்காணம் சென்று விட்டதால் வரும் வரை காத்திருந்த போலீஸார், திங்கள்கிழமை காலை 10 மணியளவில வீடு திரும்பியஆதியை கைது செய்து அவரது காரிலேயே காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவுஅலுவலகத்திற்குக் கொண்டு வந்தனர்.

சுழல் விளக்கு, கொடி:

அதே நேரத்தில் அவரது வீட்டில் பெரும் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டு மணிக்கணக்கில் ரெய்ட் நடந்தது. அப்போது 100தங்க நாணயங்கள், 30 மெபைல் போன்கள், நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவரிடம் பிடிபட்ட கார்களில் ஒரு காரின் மீது சுழல் விளக்கையும் பொறுத்தியுள்ளார். காங்கிரஸ் கொடியா, தேசியக் கொடியாஎன்ற குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு கொடியையும் காரின் முன் கட்டிக் கொண்டு சுற்றியுள்ளார்.

பெரிய சைஸ் பங்களாவான இவரது வீட்டில் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் பொறுத்தப்பட்டு வீட்டுக்கு வருபவர்கள், வெளியில்நிற்பவர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மகா பிராடு குறித்து லோக்கல் போலீசாருக்குத் தெரிந்திருந்தும் அவரிடம் வாலை ஆட்டி வேண்டியதை வாங்கிக் கொண்டுஒதுங்கியுள்ளனர். இதனால் தான் இந்த ஆதியின் மோசடிகள் இத்தனை காலம் வெளியிலேயே வராமல் போயுள்ளன.

மேலும் தனது மோசடிகளுக்கு முகமூடியாக அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் கூட்டமைப்புஎன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மகன்தான் அமைப்பின் இளைஞர் அணித்தலைவர்.

ரூ. 50 கோடி மோசடி:

இவரால் எந்த தலித்துக்கும் நன்மை விளைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் ரூ. 50 கோடி வரை ஆதிகேசவன் மோசடி விளம்பரங்கள் மூலம் பணத்தை சுருட்டியிருப்பதாக கூறப்படுகிறது.இன்று காலை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆதியை போலீஸார் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுக்கவுள்ளனர்.

ஆதி கேசவன் மீது நம்பிக்கை துரோகம், மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏமாந்ததால் ஏமாற்றினார்:

மோசடி செய்தே கோடீஸ்வரன் ஆன ஆதிகேசவன் ஆரம்பத்தில், ராயப்பேட்டை ஸ்டேட் வங்கி கிளையில் ஊழியராகஇருந்தபோது அவரது டெல்லி நண்பர் ஒருவர், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து ரூ. 2 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறிரூ. 10 லட்சம் பணத்தை ஆதிகேசவனிடம் மோசடி செய்து விட்டாராம்.

இந்தப் பிரச்சினைக்குப் பிறகு வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார் ஆதிகேசவன் என்கிறார்கள்.

ஏமாற்றப்பட்ட ஆதிகேசவன், தானும் நிதி மோசடியில் இறங்கியுள்ளார்.

ஸ்டார் ஹோட்டல் மாதிரி:

வியாசர்பாடி பகுதியில் உள்ள ஆதிகேசவனின் வீடு அரண்மனை போன்ற வடிவமைப்பில் மிகப் பிரமாண்டமாககட்டப்பட்டுள்ளது. 3 மாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் ஒவ்வொரு அறையும் ஸ்டார் ஹோட்டல் தரத்தில் இருந்ததைப் பார்த்துபோலீஸார் மிரண்டு போயினர்.

கீழ் தளத்தில் ஆதி கேசவன் நடத்தி வந்த அமைப்பின் அலுவலகம் உள்ளது. முதல் தளத்தில் மினி தியேட்டர், 100 பேர் வரைஅமரும் வசதி கொண்ட அரங்கம், 2வது தளத்தில் இரண்டு படுக்கை அறைகள் உள்ளன.

வீட்டின் 3வது தளத்தில் முக்கியப் புள்ளிகள் வந்தால் தங்குவதற்கான அறைகள் உள்ளன. அனைத்து அறைகளும் மிக சொகுசாகஅமைக்கப்பட்டுள்ளன.

ஆதிகேசவன் வீட்டிலிருந்து ஏராளமான கத்திகள் போன்ற ஆயுதங்களும் பறிமுதலாகியுள்ளன. அவரது அடியாட்கள் தற்போதுதலைமறைவாகி விட்டார்கள். 50க்கும் மேற்பட்ட அடியாட்களை சாப்பாடு போட்டு வளர்த்து வந்துள்ளார் ஆதி. அவர்களைப்பிடிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதுகளுக்கு கறி சோறு போடவே ஆதிகேசவன் மாதத்துக்கு பல லட்சங்கள் செலவிட்டிருக்கிறார்.

6 நாள் போலீஸ் காவல்:

கைது செய்யப்பட்ட ஆதி இன்று பிற்பகல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 7 நாள் அவரை போலீஸ்காவலில் வைத்து விசாரிக்கக் கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி விஜயக்குமார், ஆதிகேசவனை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.வரும் 9ம் தேதி ஆதிகேசவனை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இந் நிலையில் ஆதிகேசவனின் வங்கிக் கணக்குகள் பலவற்றை போலீஸார் முடக்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X