இன்ஸ்டாகிராமால் தோற்றோம்.. தவெக வெற்றியால் குமுறி கொட்டிய ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் உதவியுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி. சண்முகம் அணி என்று 2 பிரிவுகளாக மோதி கொண்டிருக்கிறார்கள். தவெக வெற்றி இன்ஸ்டாகிராம் மூலம் நிகழ்ந்தது. இன்ஸ்டாகிராமால் நாம் தோல்வியடைந்தோம். இது நிரந்தரமானதல்ல என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "இன்ஸ்டாகிராம் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி புதிய ஆட்சியை கொண்டு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் ஆட்சியையே மாற்ற கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. வாக்களித்தவர்கள், வெற்றி பெற்றவர்கள், வெற்றியை தவறவிட்ட அனைவரும் யோசிக்கிறார்கள். மக்களிடம் பெரியளவுக்கு மனமாற்றம் ஏற்படவில்லை.

இன்ஸ்டாகிராம் அரசியல்
திமுகவுக்கு எதிராக அதிமுக தான் ஆட்சி செய்ய வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள். அதற்கான களப்பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்தார். மக்கள் எண்ணங்கள் நிறைவேறும் நேரத்தில், திடீரென அரசியலில் நுழைந்த ஒரு சிலரால் வெற்றி திசை மாறியுள்ளது. இந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்காது. கட்சி தொண்டர்கள், மக்கள் ஆதரவு பலம் ஒரு பக்கமும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்பில் அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
நாம் தோல்வியடைந்ததும் நிலையானதல்ல. அதிமுகவின் வெற்றி நிலையானது. ஒரு சில மாற்றங்கள் இயற்கையாகவும், செயற்கையாகவும் நடைபெறும். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் மக்களுக்கே ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதிமுகவினர் யாரும் வருத்தப்பட வேண்டாம். நமது பலம், செல்வாக்கு அப்படியே தான் உள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி தக்க வைத்துள்ளார்.
சுனாமி புயல் போன்றது
வெற்றி பெறவில்லை என்று தவறான முடிவு எடுக்க கூடாது. இது இன்ஸ்டாகிராமால் ஏற்பட்ட தோல்வி. மக்கள் அளித்த வெகுமதி. இதற்காக ஒருவர் மீது பழிபோட்டு தப்பிக்க கூடாது. மக்களுக்கு திடீர் திடீரென்று மனமாற்றம் ஏற்படும். மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஒருவர் வெற்றி பெற்றிருப்பதை நிரந்தரமானதாக எப்படி பார்க்க முடியும்.
இங்குள்ளவர்கள் அனைவரும் 30 வருடங்களாக அரசியலில் தீவிரமாக பணியாற்றி பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்கு சேவை செய்துள்ளனர். அதனால் தான் அரசியலில் நீடித்திருக்க முடியாது. அவர்களின் வெற்றி நிலைப்பதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய வரை தெரியவில்லை. தேர்தலில் தவெகவின் வெற்றி சுனாமி மற்றும் புயல் போன்றது. அந்த சுனாமியில் சிக்கியவர்கள் நானும் ஒருவன். இந்த புயல் ஆடி அடங்கிவிடும். நிலையானதல்ல" என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications