12வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மதிமுக
சென்னை:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12வது ஆண்டு விழாவையொட்டி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும்பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெறும் கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.
12 ஆண்டுகளுக்கு முன் தன்னைக் கொலை செய்ய வைகோ திட்டமிட்டுள்ளதாக திகீர் புகார் கூறிய திமுக தலைவர் கருணாநிதி,பின்னர் வைகோவை கட்சியை விட்டு நீக்கினார். இதனால் நொந்து போய் நின்ற வைகோ தனிக் கட்சி தொடங்கினார்.
வருகிற 6ம் தேதியன்று, திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை வைகோ உருவாக்கி 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
வைகோவை நோக்கிய, தம்பி வா.. அண்ணன் அழைக்கிறேன் போன்ற கருணாநிதியின் பேச்சுக்களும் நமக்குபழக்கப்பட்டுவிட்டன.
கட்சியின் 12வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் நடைபெறும் கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.
அதே போல காஞ்சிபுரத்தில் அவைத் தலைவர் எல்.கணேசன், கரூரில் எம்.கண்ணப்பன், திருச்சியில் செஞ்சி ராமச்சந்திரன்,சென்னையில் நாஞ்சில் சம்பத், கலைப்புலி தாணு, ஈரோட்டில் விஜயா தாயன்பன் ஆகியோர் தலைமையிலும் மற்றும் தமிழகத்தின்மற்ற நகரங்களிலும் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கலை நிகழ்ச்சிகள், ரத்ததானம், மாணவர்களுக்கு பாடப் புத்ததகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |