கர்ப்பிணியிடம் பாலியல் பலாத்காரம்: 3 காக்கிகளின் கேவலச் செயல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தைச் சேர்ந்த 3 போலீஸார், தன்னைக் கற்பழித்து விட்டதாக கர்ப்பிணிப் பெண் புகார் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் புளியாண்டபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். 17 வயதே ஆன இவருக்குத்திருமணாகிவிட்டது. தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார் பழனியம்மாள்.

கடந்த மாதம், சேலம் சூரமங்கலம் போலீஸார் புளியாண்டபட்டிக்கு வந்து பழனியம்மாளின் கணவர் ராஜாவை திருட்டு வழக்கில்கைது செய்து சென்றனர்.

இந் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் குமாரை அணுகி பழனியம்மாள் மனு ஒன்றைக்கொடுத்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

எனது கணவரை விசாரணைக்கு அழைக்க வந்த போலீஸார் என்னையும் சேலத்திற்குக் கூட்டிச் சென்றனர். சேலம் ரயில் நிலையம்அருகே உள்ள ஒரு லாட்ஜில் வைத்து போலீஸார் என்னைக் கற்பழித்தனர்.

இதை வெளியில் சொன்னால் கணவரை நிரந்தரமாக சிறையிலேயே வைத்துவிடுவோம் என மிரட்டினர் என்று கூறியுள்ளார்.

இந்த பகீர் புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி. அசோக்குமார், இது குறித்து விசாரிக்க பர்கூர் டி.எஸ்.பி. வில்வராணிக்குஉத்தரவிட்டார்.

ஆரம்பகட்ட விசாரணையில் இந்த மூன்று போலீசாரும் பழனியம்மாளிடம் அத்துமீறியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த 3 போலீஸார் மீதும் மத்தூர் போலீஸார் கடத்தல், அடைத்து வைத்தல், கற்பழித்தல், மானபங்கம் செய்தல்,காயம் ஏற்படுத்துதல், கூட்டமாக வருதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த கற்பழிப்பு விவகாரம் குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் புகார் கூறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் ஆபாஷ் குமார் கூறுகையில், உதவி கலெக்டர் விசாரணை நிடந்துவருகிறது. விசாரணைக்குப் பின்னர், குற்றம் நடந்தது உண்மை என்றால் அதன் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கைது செய்யப்பட்ட ராஜா பயங்கரமான கொள்ளைக்காரன். அவன் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. அவனை ஏப்ரல் 8ம்தேதியே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்து விட்டோம்.

சம்பவம் நடந்து இத்தனை நாட்களுக்குப் பின்னர் இந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். கற்பழிப்புப் புகார் குறித்து உதவிகலெக்டர் விசாரணைக்குப் பிறகே எதுவும் கூற முடியும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+