For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் மலர் தூவ.. சாரட் வண்டியில் பவனி வந்த பந்தா ஆதி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Aathikesavanமோசடி வேலைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு திருந்தி வாழ நினைத்தேன். ஆனால் கடவுள் என்னைக் கைவிட்டு விட்டார்,தண்டித்து விட்டார் என்று பிராடு மன்னன் ஆதி கேசவன் கூறியுள்ளார்.

மோசடி விளம்பரங்கள் மூலம் பல கோடியை விழுங்கி ஏப்பம் விட்டுள்ள சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த "அல்டாப்பு"ஆதிகேசவன் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் எனக்கு ரூ. 3 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 25 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்.

அந்தப் பணத்தை திரும்ப வாங்குவதற்காக டெல்லி சாணக்கியா ஹோட்டலுக்குப் பானேன். ஆனால் அடியாட்களை வைத்துஎன்னை அடித்து விரட்டி விட்டார் அந்த நபர். இதையடுத்து இழந்த பணத்தை மீட்க ஏமாற்றப்பட்ட வழியையே தொழிலாகமாற்றிக் கொண்டு செயல்பட முடிவு செய்தேன். வங்கி வேலையை உதறி விட்டு இந்த மோசடித் தொழிலில் இறங்கினேன்.

பண மோசடி செய்ததை நான் மறுக்கவில்லை. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் திருந்தி வாழ நினைத்த நேரத்தில மாட்டிக் கொண்டுவிட்டேன். எனது மனைவியும், இந்த தொழிலை விட்டு விடுமாறு பலமுறை கேட்டுக் கொண்டார்.

இதனால் 6 மாதங்களில் இதை விட்டு விட்டு திருந்தி வாழ நினைத்திருந்தேன். ஆனால் கடவுள் அதற்குள் தண்டித்து விட்டார்.

ஹெலிகாப்டலிருந்து மலர் தூவ பவனி:

இதற்கிடையே ஆதிகேசவன் குறித்த பல "பந்தா" தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி என்ற கிராமத்தில் ஆதிக்குத் தெரிந்த பிரமுகரின் வீட்டு கிரக பிரவேசத்தில் ஆதி கலந்துகொண்டுள்ளார். அப்போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வந்த ஆதிக்கு, மொரப்பூர் ரயில் நிலையத்தில் மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர்தர்மபுரி வரை செல்லும் வழியெங்கும் குட்டி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டு அந்தப் பாதையில் காரில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார் ஆதி.

இதற்கென பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் வாடகைக்குப் பிடிக்கப்பட்டுள்ளது.

முன்னும், பின்னும் ஏராளமான கார்கள் அணிவகுக்க, வெளிநாட்டு ஜனாதிபதி போல பந்தாவாக கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்ஆதி. தர்மபுரி எல்லையில் பூரண கும்ப மரியாதையும் கொடுத்து கலக்கியுள்ளார்கள்.

பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சாரட் வண்டியில் மனைவி, மகளுடன் வலம் வந்துள்ளார் ஆதி.

கிரகப் பிரவேச வீட்டை அடைந்தபோது யானைகள் மாலை போட்டு ஆதியை வரவேற்றுள்ளன.

இந் நிகழ்ச்சியில் ஏராளமான தொழிலதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் பலரையும் ஆதி, பின்னர் ஏமாற்றியதுதான் இதில் பெரிய தமாஷ்.

பார்ப்பதற்கு இயக்குனர் கம் காமெடி நடிகர் டி.பி.கஜேந்திரன் போல இருந்தாலும், ஆள் பக்கா வில்லன் பார்ட்டி.

பணத்தைத் திருப்பிக் கேட்ட பலரையும் சோறு போட்டு வளர்க்கும் தடி மாடுகளான அடியாட்கள் மூலம் அடி, உதை கொடுத்துவிரட்டியுள்ளார் ஆதி.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பஸ் அதிபர் ரூ. 3 கோடி வேரை ஆதியிடம் ஏமாந்துள்ளாராம். பணத்தைத் திருப்பிக்கேட்டபோது அவருக்குக் கிடைத்த பதில் கொலை மிரட்டல்.

இதற்கிடையே, பொய் புகார் கொடுத்ததாக ஆதி கேசவன் மீது விமான நிலைய காவல் நிலையத்தில் புதிதாக ஒரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி பெங்களூருக்கு சென்றார் ஆதி. அடுத்த நாள் விமானநிலைய மேலாளருக்குப் போன் செய்து தனது 2 கிலோ எடை கொண்ட பிரமாண்டத் தங்கச் சங்கிலி விமான நிலையத்தில்காணாமல் போய் விட்டதாக கூறியுள்ளார்.

அதற்கு அடுத்த நாள் விமான நிலைய காவல் நிலையத்திலும் ஆதி புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்தப் புகாரே பொய்யானது என்று கூறி இப்போது ஆதி மீது ஒரு புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகைகளுடன் தொடர்பு?

மோசடி செய்த பணத்திலிருந்து அவர், நடிகர், நடிகைகளுக்கு தாராளமாக அள்ளி, அள்ளி கொடுத்துள்ளார். சிலருக்கு கடனாகவும்கொடுத்துள்ளார். இதே போல அரசியல்வாதிகளுக்கும் இவர் பணம் சப்ளை செய்துள்ளாராம்.

எந்தெந்த நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கு ஆவணங்கள்ஏதும் உள்ளதா, கொடுத்த பணம் திரும்ப வருமா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 கோடியுடன் கூட்டாளிகள் எஸ்கேப்:

இந் நிலையில் ஆதிகேசவனின் கூட்டாளிகள் 2 பேர், ரூ. 6 கோடி பணத்துடன் தப்பியோடியுள்ளனர். அவர்களைப் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டு தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது.

போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் ஆதிகேசவனிடம் விசாரணையில் முக்கியத் தகவல் ஒன்று போலீஸாருக்குக்கிடைத்துள்ளது. ஆதி கேசவனின் கூட்டாளிகள் 2 பேர் ரூ. 6 கோடி பணத்துடன், அவர் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று பதுங்கியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து இருவரையும்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப் போலீஸார் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

அதே போல ஆதிகேசவனின் மோசடிகளுக்கு உதவியாக இருந்த அவரது பி.ஏ. ஜெயவீரனும் தலைமறைவாகிவிட்டார்.அவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

சிக்கப் போகும் காக்கிகள்:

இதற்கிடையே, ஆதி கேசவனுக்கு பல வகைகளில் உதவியாக இருந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களைபோலீஸார் சேகரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். அதுகுறித்துகணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. போதிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் இருவரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X