தமிழகத்தில் இருந்து புலிகள் பெட்ரோல் கடத்தல்: மத்திய அரசு
டெல்லி:
தமிழகத்தில் இருந்து பெட்ரோல், டீசல், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விடுதலைப் புலிகள் இயக்கம்தொடர்ந்து கடத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 2004-05ம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சக ஆண்டறிக்கையில்,
அத்தியாவசியப் பொருட்களுக்கு தமிழகத்தை புலிகள் இயக்கம் தொடர்ந்து தனது தளமாகப் பயன்படுத்தி வருகிறது.
அதே போல கொள்கைரீதியில் தங்களை எதிர்ப்போரை பட்டியலிட்டு வைத்துள்ள அந்த அமைப்பு, தேவைப்பட்டால்அவர்களைத் தீர்த்துக் கட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
தனது கடல் புலிகள் அமைப்பை தனி அமைப்பாக கருதும்படி இலங்கை அரசை புலிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுஇந்தியாவின் பாதுகாப்புக்கு இன்னொரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இங்கையில் மிக சக்தி வாய்ந்த, மிகத் தீவிரமான, மிகச் சிறப்பான கட்டமைப்பு கொண்ட தீவிரவாத இயக்கமாக எல்டிடிஈதொடர்ந்து விளங்குகிறது. தமிழகத்தின் தென் பகுதிகளில் இந்த அமைப்புக்கு நெருக்கமான தொடர்புகள் இன்னும் உள்ளன.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1992ம் ஆண்டு மே 14ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. கடைசியாக அந்தத்தடை கடந்த 2004ம் ஆண்டு மே 14ம் தேதி நீட்டிக்கப்பட்டது.
இந்தத் தடையை நீக்க வேண்டும் என புலிகள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications