சூறாவளி: பிஎஸ்எல்வி ஏவப்படும் நேரம் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் சூறாவளிக் காற்றால் உருவாகியுள்ள மோசமான காலநிலை காரணமாக பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுவது30 நிமிடம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஸ்ரீஹரிகோட்டா செல்லும்வழியில் இன்று மாலை சென்னை வந்தார்.

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கார்டோ சாட்-1, ஹாம் சாட் ஆகிய செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-6ராக்கெட் ஏவப்படவுள்ளது.

இந்த ராக்கெட்டை பறக்க விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்றுகாலை 5.45 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 10.19 மணிக்கு ராக்கெட்டை பறக்க விட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது மோசமான வானிலை காரணமாக ராக்கெட் ஏவும் நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகஇஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலில் காலை 10.19 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த அனைத்துஏற்பாடுகளும் தயாராக இருந்தன.

இந் நிலையில் பலத்த காற்று வீசியதால் மோசமான வானிலை நிலவி வருகிறது. அதனால் ராக்கெட் ஏவும் நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே திட்டமிட்டிருந்த நேரத்தை விட 4 நிமிடம் முன்னதாகவோ அல்லது 30 நிமிடம்தாமதாமாகவோ ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இஸ்ரோ தலைவர் டாக்டர் மாதவன் நாயர் நேற்று திருப்பதி கோவிலுக்கு அதிகாரிகளுடன் சென்று சுவாமி தரிசனம்செய்தார். இரு செயற்கைக் கோள் மற்றும் ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை சுவாமி வெங்கடாசலபதியின் காலடியில் வைத்துபிரார்த்தனை நடத்தினார்.

P.S.L.Vநேரத்தில் மாற்றம்:

நாயர் கூறுகையில், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அருகே கடந்த 2 நாட்களாக சூறாவளிக் காற்று வீசுவதுடன்காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை காலை 10.19 மணிக்குப் பதிலாக 10.50 மணிக்கு ராக்கெட்பறக்க விடப்படும்.

துருவ சுற்றுப்பாதையில் 617 கிமீ தூரத்தில் கார்டோ சாட்-1 செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக் கோளில்உள்ள நவீன கேமராக்கள் அனுப்பி வைக்கும் வரை படங்கள் மூலம் நகரமைப்புத் திட்டம் மற்றும் நீர்வளப் பகுதிகளை அறிந்துகொள்வது உட்பட பல்வேறு தகவல்களைப் பெறமுடியும்.

3,800 கிலோ எடையுள்ள இன்சாட்-4ஏ என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் இந்த ஆண்டு இறுதியில் தென் அமெரிக்காவின்பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏவப்படும். நமது பிஎஸ்எல்வி ராக்கெட்டால் 2,000 கிலோ எடையை மட்டுமே சுமந்துசெல்லமுடியும் என்பதால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மைய ராக்கெட்டின் நிலவுப் பயணம் 2007ம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். சுனாமி பேரலைகள்வருவதை முன்கூட்டியே கண்டறியும் கருவிகளை தயாரிக்க கடும் முயற்சி எடுத்து வருகிறோம். இன்னும் இரண்டரைஆண்டுகளில் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டு விடும் என்றார் மாதவன் நாயர்.

கலாம் சென்னை வந்தார்:

இதற்கிடையே ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ. 400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாட்டுக்கு அர்ப்பணித்துவைக்கிறார். இதற்காகவும், பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில்ஏவப்படுவதை பார்வையிடுவதற்காகவும் இன்று மாலை கலாம் சென்னை வந்தார்.

இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் வந்த அவரை விமான நிலையத்தில் தமிழக தலைமை செயலாளர் நாராயணன்,டிஜிபி அலெக்சாண்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டாசென்றார்.

அங்கு அவர் புதிய ராக்கெட் ஏவுதளத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

அதன் பின்னர் அங்கேயே இன்று இரவு தங்கும் கலாம், நாளை காலை பிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்தப்படவுள்ளதை நேரில்பார்க்கிறார். அதன் பின்னர் சென்னை திரும்பி விமானம் மூலம் அந்தமான் புறப்பட்டுச் செல்கிறார். குடியரசுத் தலைவராகபதவியேற்ற பின்னர் அப்துல் கலாம் அந்தமான் செல்வது இதுவே முதல் முறையாகும்.

அங்கு சுனாமி சீரமைப்புப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு பின்னர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+