கொலை வழக்கிலும் சிக்குகிறார் ஆதிகேசவன்
சென்னை:
மோசடி மூலம் சம்பாதித்த பல கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு, டெல்லியில் ஆடம்பர பங்களாவை ஆதி கேசவன்வாங்கியுள்ளார். அதுதொடர்பான பிரச்சினையின்போது ஒருவரை ஆதிகேசவன் ஆள் வைத்து கொலை செய்து விட்டதாகத்தெரியவந்துள்ளது.
மோசடி மன்னன் ஆதி கேசவன் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதுவரை ரூ. 150 கோடிவரை ஆதி கமிஷன் என்ற பெயரில் பலரிடம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ரூ. 1400 கோடி வரைக்கும், போலியான காசோலைகளை நூற்றுக்கணக்கானோருக்கு கொடுத்து கலக்கியுள்ளார்ஆதிகேசவன்.
ஆதிகேசவன் மீதான வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் லட்சுமி நாதன்ஆகியோர் நேரடியாக விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ஆதிகேசவன் இப்போது போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்கப்படுகிறார்.
மோசடி கொள்ளையில் அடித்த பணத்தை வைத்து டெல்லியில் ஒரு விருந்தினர் மாளிகையை ஆதிகேசவன் வாங்கியுள்ளார். இந்தமாளிகை வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவரை அடியாட்களை ஏவி ஆதிகேசவன் கொலை செய்திருப்பதாகத்தெரிய வந்துள்ளது. இதை ஆதிகேசவன் மறுத்து வருகிறார்.
ஆனால், ஆதியின் கூட்டாளி மிகிரிடம் விசாரித்த போது, டெல்லியில் விருந்தினர் மாளிகை வாங்கியது உண்மை தான் என்றும்,கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளான்.
இதற்கிடையே ஆதிகேசவனின் நெருக்கமான கூட்டாளியான தப்பியோடிய ஜெயவீரன் பிடிபட்டால் எல்லா ரகசியங்களும்வெளியாகும் என்று தெரிகிறது. நெல்லையைச் சேர்ந்த இவன் இப்போது தலைமறைவாக உள்ளான்.
இந் நிலையில் நெல்லையைச் சேர்ந்த விஜயன் என்பவர் தனது வழக்கறிஞருடன் நெல்லை சரக டிஐஜி கோபாலகிருஷ்ணனைநேரில் சந்தித்து ஆதிகேசவனால் தான் ஏமாற்றப்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விஜயனின் வழக்கறிஞர் கூறுகையில், ரூ. 2 கோடி கடன் தருவதாக ஆதிகேசவன் கூறினார். அதற்கு ரூ. 6 லட்சம்கமிஷனாக கேட்டார். அதை விஜயன் கொடுத்தவுடன், ரூ. 2 கோடிக்கான காசோலையை ஆதி கேசவன் கொடுத்துள்ளார். ஐசிஐசிஐவங்கி காசோலையான அதை வங்கியில் போட்டபோது, ஆதிகேசவன் கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்துவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன், ஆதிகேசவனை அணுகி கேட்டபோது, இப்போது தருகிறேன், அப்போது தருகிறேன் என்றுகூறிக் கொண்டிருந்தாரே ஒழிய, பணத்தைத் தரவில்லை. இப்போது ஆதிகேசவன் மாட்டியுள்ளதால் அவர் மீது புகார்கொடுத்துள்ளோம் என்றார்.
பணப் படுக்கையில் தூங்கினார்:
கோடி கோடியாக சம்பாதித்த ஆதி கேசவன் ஒரு கட்டத்தில் பணத்தை படுக்கையில் போட்டு அதன் மேல் தூங்கினாராம். போலீஸ்விசாரணையின்போது அவரே இதை தெரிவித்துள்ளார்.
கோடி கோடியாக சம்பாதித்த ஆதி கேசவன், எவ்வளவு சம்பாதித்தோம் என்றே தெரியாத அளவுக்கு பணத்தில் மூழ்கியுள்ளார்.அதேபோல எத்தனை பேரை, மோசடி செய்தார் என்றும் அவருக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு கணக்கு வழக்கு இல்லாமல்விளையாடியுள்ளார்.
கடன் கேட்டு வருபவர்களை ஆதி அசத்துவதே பெரிய கலை. கடன் கேட்டு வருபவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசுவார்.எவ்வளவு வேணும் என்று கேட்டு உடனே அந்தத் தொகைக்கான காசோலையை கிழித்து கையில் வைப்பார். அவ்வளவுதான்,கடன் கேட்டவர் அசந்து போய் விடுவார்.
அதன் பின்னர் ஆதி கேட்கும் கமிஷன் தொகையை (இதை மட்டும் ரொக்கமாகத்தான் ஆதி வாங்குவாராம்!) அவர்கள் கொடுத்துவிட்டு சந்தோஷமாக கிளம்புவார்கள்.
வங்கியில் போய் போட்ட பிறகுதான் ஆதி கொடுத்த செக் போலியானது என்பது தெரியவரும்.
இவரிடம் கடன் கேட்டு கோடிக்கணக்கில் மோசம் போனவர்களின் எண்ணிக்கை 500 பேருக்கு மேல் இருக்கலாம் என்றுகூறப்படுகிறது. செக்கை வாங்கிய அத்தனை பேரும், அந்தப் பணத்தை எப்படி ஆதியிடமிருந்து பெறுவது என்று புரியாமல்,அவரிடம் நேரில் சென்று கேட்கவும் தைரியம் இல்லாமல் (அடியாட்கள் பயத்தால்) போலி செக்கை வைத்துக் கொண்டுவெறுத்துப் போயிருந்துள்ளனர்.
இப்போது தான் தைரியம் பெற்று ஒவ்வொருராக புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
குவித்த சொத்துக்கள்:
மோசடி செய்து சம்பாதித்த பணத்தில், வியாசர்பாடியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் ஆடம்பரமான வீட்டைக் கட்டியுள்ளார்ஆதிகேசவன். அதன் இன்றைய மதிப்பு ரூ. 1.5 கோடியைத் தாண்டுமாம். பின்னர் தனது மகள் பெயரில் ரூ. 10 லட்சம் மதிப்பில்ஃபிளாட் ஒன்றை வாங்கியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தனது சொந்த ஊல் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் பண்ணை அமைத்துள்ளார்.மரக்காணத்தில் 15 ஏக்கரில் சவுக்குத் தோப்பு வைத்துள்ளார். இதுதவிர 13 கார்களையும் வாங்கிக் குவித்துள்ளார்.
கோவில் காரியம் என்று காசு கேட்டு வருபவர்களுக்கு வாரி வாரி வழங்குவாராம் ஆதி. ஒரு கோவிலில் இவரது பெயரில் தினசரிஅன்னதானம் வழங்கப்பட்டு வருகிறதாம்.
இதவிர அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுத்து வந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஒருவர் கடந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட்டபோது, இவரிடம் ரூ. 10 லட்சம் பணம் கேட்டுள்ளார்.கொடுப்பதாக கூறிய ஆதி, கடைசி வரை கொடுக்காமல் டபாய்த்து விட்டாராம். அதேபோல வெள்ளை ரவுடி என்ற பிரபலரவுடியும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது ரூ. 1 லட்சம் கேட்டாராம். ஆனால் ரூ. 20,000த்துடன் கணக்கை முடித்துக்கொண்டாராம் ஆதி.
கடந்த நான்கு வருடங்களில் விமான பயணத்திற்காகவே ரூ. 50 லட்சம் வரை செலவு செய்துள்ளார் ஆதி.
ஆதிகேசவனிடம் மாட்டாமல் தப்பிய கமல்












Click it and Unblock the Notifications