ஆதிகேசவன் மீண்டும் சிறையில் அடைப்பு
சென்னை:
மோசடி மன்னன் ஆதிகேசவன், 6 நாள் போலீஸ் காவல் முடிவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டார்.
பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆதிகேசவன் கடந்த 6 நாட்களாக போலீஸ் காவலில்விசாரிக்கப்பட்டு வந்தார். அவர் கொடுத்த தகவல்களின் பேரில் அவரது கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள ஆதிகேசவனின் வலது கரமான ஜெயவீரனைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
இந் நிலையில் போலீஸ் காவல் முடிந்ததால், இன்று ஜார்ஜ் டவுன் 3வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதி மீண்டும்ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதால், சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றுகோரி ஆதிகேசவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி சிவசண்முகம், இந்த மனு 10ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி வரும்17ம் தேதி வரை ஆதிகேசவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆதிகேசவன் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, ஆதிகேசவனின் கார் டிரைவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து போலீஸ் தனிப்படை பெங்களூர் விரைந்துள்ளது.
ஓரிரு நாட்களில் அவரை போலீஸார் பிடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிடிபட்டால் ஆதியின் தொடர்புகள்குறித்து மேலும் பல விவரங்கள் தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.
ஆதிகேசவனிடம் கடன் வாங்கிய ஜெயேந்திரர்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications