ஆதிகேசவனிடம் கடன் வாங்கிய ஜெயேந்திரர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மோசடி மன்னன் ஆதி கேசவனின் ரூ. 2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி வைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மோசடி மன்னன் ஆதிகேசவனின் மோசடி லீலைகள் குறித்து தினசரி புதுப் புதுத் தகவல்கள்கிடைத்து வருகின்றன. போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள ஆதிகேசவனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது.

அவரது கூட்டாளியான ஜெயவீரன் என்பவர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். தாவூத் இப்ராகிம் உடனான ஹலாவாதொடர்புகள் குறித்தும் ஆதியிடம் விசாரணை நடக்கிறது.

இந் நிலையில், ஆதிகேசவனின் சொத்துக்களை முடக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஆதிகேசவன்இதுவரை கொடுத்த தகவல்களின்படி அவருக்கு ரூ. 2 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பினாமிகள் பெயரில் உள்ள பல கோடி சொத்துக்களின் விவரத்தை அவர் வெளியிட மறுத்து வருகிறார்.

ஆதி கொடுத்துள்ள தகவலின்படி, வியாசர்பாடியில் உள்ள ஆடம்பர மாளிகை (ரூ.1.5கோடி மதிப்பு), அவரது மகள் பெயரில்வாங்கப்பட்டுள்ள ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஃபிளாட், சொந்த ஊரில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பண்ணை,மரக்காணத்தில் உள்ள 30 ஏக்கர் நிலம், சவுக்குத் தோப்பு ஆகியவற்றை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, ஆதி, அவரது மனைவி சாந்தி, மகள் அனிதா, மகன்கள் பாரதி, சாரதி ஆகியோர் பெயரில் 22 வங்கிகளில் உள்ள 78கணக்குகளை போலீஸார் முடக்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஆதிகேசவனின் போலீஸ் காவல் இன்றுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது. இதையடுத்து அவரை பிற்பகல்நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகிறார்கள்.

ஆதி வீட்டுக்கு சென்ற ஜெயேந்திரர்:

ஆதிகேசவனின் வீட்டுக்கு ஜெயேந்திரரும் வந்து போயுள்ளார். அவரது வீட்டில் வந்த ஜெயேந்திரர் விசேஷ பூஜை நடத்தியுள்ளார்.

அந்த சமயத்தில், சங்கர மடம் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு வட்டி இல்லாமல் ரூ. 10 கோடி கடன் கொடுக்குமாறுஆதியிடம் கேட்டுள்ளார் ஜெயேந்திரர். அதன்படி ஆதியும பணம் கொடுத்து உதவினாராம். இதை தனது வாக்குமூலத்தின்போதுஆதி தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, ஆதிகேசவனின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தனதுபாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டதாக ஆதிகேசவன் கூறியுள்ளார். இருப்பினும் அதைக் கண்டுபிடிக்க போலீஸார்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆதி-தாவூத் தொடர்பு?: மும்பையில் விசாரணை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+