ஆதி-தாவூத் தொடர்பு?: மும்பையில் விசாரணை
சென்னை:
வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்து வந்த ஆதிகேசவனுக்கும் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கும்இடையே ஹவாலா தொடர்புகள் இருந்ததாகக் கூறப்படுவதையடுத்து அது குறித்தும் போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆதிகேசவனிடம் நடந்து வரும் போலீஸ் விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
அதில் முக்கியமானது தாவூதுடனான ஹவாலா லிங்க். இது குறித்து மேலும் விசாரிக்க ஒரு போலீஸ் படை மும்பை சென்றுள்ளது.
இந் நிலையில் ஆதிகேசவனிடம் பணம் வாங்கிய பலர் தற்போது எம்.பிக்களாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் தென்மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முக்கியப் புள்ளி (இப்போது அவர் எம்.பியாகஉள்ளார்), சென்னை மற்றும் வட மாவட்டத்தைச் சேர்ந்த சில திமுக புள்ளிகள் (அவர்களில் சிலர் இப்போது எம்.பிக்களாகஉள்ளனர்), பாமகவைச் சேர்ந்த சில புள்ளிகளுக்கு ஆதி கேசவன் லட்சக்கணக்கில் பிரசாரத்திற்காக அள்ளி வழங்கியுள்ளார்.
மற்ற கட்சியினரை விட திமுகவினரே அதிக அளவில் ஆதி கேசவனிடம் பணம் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களில் சிலர்இப்போது எம்.பிக்களாக உள்ளனர். சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை அரசியல்வாதிகளுக்கும், போலீஸாருக்குமே தான்செலவிட்டதாக ஆதிகேசவன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
என்னிடம் பணம் வாங்கிய அரசியல்வாதிகள், போலீஸார் இப்போது என்னைக் கைவிட்டு விட்டனர், நான் மட்டும்தான் மாட்டிக்கொண்டேன் என்று கண்ணீருடன் கூறிய ஆதி, ஆரம்பத்திலேயே போலீஸார் தண்டித்திருந்தால் இந்த அளவுக்கு நான்அசிங்கப்பட்டிருக்க மாட்டேன் என்றும் கூறி போலீசாருக்கும் கிலிடி பீலிங் கொடுத்தாராம்.
ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவது, ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோருடன் ஆதி கேசவன்இருப்பது போன்ற புகைப்படங்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு முக்கிய எதியான காங்கிரஸ் மற்றும்திமுக எம்.பிக்களின் பெயர்கள் ஆதியுடன் அடிபடுவதால் இந்தப் பிரச்சினையை அதிமுக வேறு கோணத்தில் நகர்த்தும் என்றுதெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications