பொன்முடி மீது வழக்கு பதிவு: ராவ் நடவடிக்கை
காஞ்சிபுரம்:
தேர்தல் சிறப்பு ஆணையர் கே.ஜே.ராவின் உத்தரவுப்படி, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சுரேஷ் ராஜன்ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட எஸ்.பி சமுத்திரப்பாண்டிக்கு ராவ் உத்தரவிட்டார்.
இதேபோல, பிரச்சாரத்தில் ஈடுபட பாஸ் இல்லாமல் காரில் பிரச்சாரத்துக்கு வந்த முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷ் ராஜன் மீதும்நடவடிக்கை எடுக்க ராவ் உத்தரவிட்டார்.
பழனி மாணிக்கம் மறுப்பு:
இதற்கிடையே தேர்தல் பிரச்சாரம் செய்ய தான், அரசுப் பணத்தில் சென்னைக்கு வரவில்லை என்று திமுகவைச் சேர்ந்த மத்தியநிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் மறுத்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக டெல்லியிலிருந்து சென்னைக்கு பழனிமாணிக்கம், அரசுப் பணத்தில் விமானத்தில்வந்ததாக அதிமுக புகார் கூறியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அமைச்சர் பன்னீர்செல்வம் புகார் மனு கொடுத்தார்.
இந்தப் புகாரை பழனிமாணிக்கம் மறுத்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவின் புகார்கேலிக்கூத்தானது, பொய்யானது.
நான் எனது சொந்தப் பணத்தில்தான் டெல்லியலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தேன். இங்கிருந்து எனது கார் மூலம்தான்பிரசாரத்திற்கும் சென்றேன். மத்திய அரசிடமிருந்தோ அல்லது மாநில அரசின் உதவியையோ நான் பெறவே இல்லை. எனக்குதமிழக அரசோ, மத்திய அரசோ ஏதாவது செலவு செய்ததாக அதிமுகவினரால் நிரூபிக்க முடியுமா என்று கேட்டார்பழனிமாணிக்கம்.
340 வழக்குகள்: ராவ் அதிரடி
இந் நிலையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் 340 வழக்குகள்பதிவாகியுள்ளன.
கே.ஜே.ராவ் வருகைக்குப் பிறகு திமுக, அதிமுக என கட்சி வித்தியாசம் இல்லாமல் விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குகள்பதிவாகி வருகின்றனர். இதுவரை இரு தொகுதிகளிலும் 340 வழக்குகள் பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம் தொகுதியில் 130 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கும்மிடிப்பூண்டியில் 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதிகபட்சமாக அதிமுகவினர் மீது 118 வழக்குகளும், திமுகவினர் மீது 65 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இதுதவிர காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன.
20 வாகனங்கள் பறிமுதல்:20 வாகனங்கள் பறிமுதல்:கும்மிடிப்பூண்டி தொகுதியில் வெளிமாவட்ட தொண்டர்களை கட்டுப்படுத்த போலீஸார் வாகன சோதனை நடத்த முடிவுசெய்தனர். இதையடுத்து பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பற்றி தேர்தல் அதிகாரியிடம் கூறி அனுமதிச் சீட்டுபெறவேண்டும்.இதற்காக 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. நேற்றுடன் இந்த அவகாசம் முடிந்தது. இதைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல்பிரசாரத்தில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸார் முடிவெடுத்தனர்.இதன்படி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வரதராஜின் தலைமையில் போலீஸார் நேற்று விடிய விடிய வாகன சோதனையில்ஈடுபட்டனர். இதில் அனுமதிச் சீட்டு பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின்டிரைவர்களும் கைது செய்யப்பட்டனர்.இவற்றில் 9 வாகனங்கள் அதிமுகவினருக்கும், 7 வாகனங்கள் திமுகவினருக்கும் சொந்தமானதாகும்.கும்மிடிப்பூண்டி தொகுதியில் வெளிமாவட்ட தொண்டர்களை கட்டுப்படுத்த போலீஸார் வாகன சோதனை நடத்த முடிவுசெய்தனர். இதையடுத்து பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பற்றி தேர்தல் அதிகாரியிடம் கூறி அனுமதிச் சீட்டுபெறவேண்டும்.
இதற்காக 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. நேற்றுடன் இந்த அவகாசம் முடிந்தது. இதைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல்பிரசாரத்தில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸார் முடிவெடுத்தனர்.
இதன்படி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வரதராஜின் தலைமையில் போலீஸார் நேற்று விடிய விடிய வாகன சோதனையில்ஈடுபட்டனர். இதில் அனுமதிச் சீட்டு பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின்டிரைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவற்றில் 9 வாகனங்கள் அதிமுகவினருக்கும், 7 வாகனங்கள் திமுகவினருக்கும் சொந்தமானதாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications