கும்மிடிப்பூண்டியில் வெளியூர் ஆட்கள் வெளியேற்றம்ர்

Subscribe to Oneindia Tamil

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி தொகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட வெளியூர் ஆட்களை போலீஸார் வெளியேற்றினர்.

இடைத்தேர்தல் நடைபெறும் கும்மிடிப்பூண்டி மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகளில் தங்கியுள்ள வெளியூர் ஆட்களை 12ம் தேதிக்குள்வெளியேற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியிலுள்ள பெரியபாளையம் பகுதியில் தங்கியிருந்த 67 அதிமுகவினர் மற்றும் 20 திமுகவினர்வெளியேற்றப்பட்டனர். லாட்ஜில் தங்கியிருந்த திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர் சிவாஜி உட்பட 20 பேரை போலீஸார்வெளியேற்றினார்கள்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த கம்பம் ஜெகனாதன், கார்த்திகேயன் உட்பட 42 அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். மேலும்பெரியபாளையம் மாந்தோப்பு பகுதியில் தங்கியிருந்த அதிமுகவைச் சேர்ந்த 25 பேரை போலீஸார் கண்டுபிடித்துவெளியேற்றினார்கள்.

பெரியபாளையத்தில் நேற்று 2 லாட்ஜ்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தங்கியிருந்த கட்சிபிரமுகர்கள் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி வெளியூர் ஆட்களை தங்க வைத்திருந்ததால் 2 லாட்ஜ் மேனேஜர்களும், 2 திருமணமண்டபங்களின் மேனேஜர்களும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸாரின் இந்த தீவிர நடவடிக்கையால் கும்மிடிப்பூண்டி தொகுதியை ஒட்டி ஆந்திர மாநிலத்திலுள்ள பிச்சாட்டூர், சத்யவேடுபகுதியிலுள்ள லாட்ஜ் மற்றும் திருமண மண்டபங்களை நோக்கி அரசியல் பிரமுகர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனையும் கட்டுப்படுத்த ஆந்திர மாநில போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க தமிழக போலீசார்திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+