ஜெயலட்சுமி: சிபிஐ போட்ட வழக்கு- ஜூன் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மதுரை:
4 வழக்குகளில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், ஜெயலட்சுமிக்கு இன்று குற்றப் பத்திரிக்கை நகல்வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீதிபதி வராததால் ஜூன் 2ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
போலீஸார் மீது சரமாரியான புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலட்சுமி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையின் முடிவு ஜெயலட்சுமிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஜெயலட்சுமி செய்த மோசடிகள் மற்றும் போலீஸ் பெயரைக் கூறி அவர் செய்த மோசடிகளின் அடிப்படையில் மதுரை தலைமைக்குற்றவியல் நீதிமன்றத்தில் 4 வழக்குகளை சிபிஐ தொடர்ந்து அதில் குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்தது.
ஆனால், அவரை பாலியல் பலாத்காரம் செய்த 20 காக்கிகள் விஷயத்தை சிபிஐ அப்படியே விட்டுவிட்டது.
இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 420ன் கீழ் ஜெயலட்சுமி மீதே சிபிஐ சார்பில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்தக் குற்றப்பத்திரிகைகளில் ஜெயலட்சுமி தவிர இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலட்சுமி உள்ளிட்டோருக்கு இன்று குற்றப் பத்திரிக்கை நகல்கள்வழங்கப்படுவதாக இருந்ததது. இதற்காக ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
ஆனால் நீதிபதி அய்யாசாமி வராததால் வழக்கு ஜூன் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இன்று அவருக்குகுற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று கோரி ஜெயலட்சுமி தாக்கல்செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
இந்த 4 வழக்குகள் தவிர தாராபுரம், திருச்சி நீதிமன்றங்களில் தலா 1 வழக்கும் ஜெயலட்சமிக்கு எதிராக உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. அந்த வழக்குகளிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இந் நிலையில் சிபிஐ இந்த விஷயத்தில் போலீசாரை காக்கும் போக்கில் செயல்பட்டுள்ளதாகவும், இதில் மறு விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications