இலங்கை அரசின் சுனாமி அரசியல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக வந்து குவிந்துள்ள வெளிநாட்டு உதவியை தமிழர்பகுதிகளுக்குச் செலவிடாமல் அந் நாட்டு அரசு தொடர்ந்து பாகுபாடு காட்டி வருகிறது.

இதற்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுனாமியால் இலங்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதியில் தான் அதிக அளவு பாதிப்புஏற்பட்டது. ஆனால் தமிழர் வாழும் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.

இதை தொடர்ந்து வெளிநாடுகளின் உதவியை விடுதலைப் புலிகள் கோரினர். இந் நிலையில் வெளிநாடுகளில் இருந்து இதுவரைசுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உதவிகள் குவிந்துள்ளன.

இந்த உதவி நிதியை தமிழர் பகுதிகளில் செலவிடுவதில் விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் இணைந்து செயல்படத்திட்டமிட்டன.

ஆனால், இதற்கு இதற்கு சந்திரிகா அரசின் முக்கிய கூட்டணி கட்சியான ஜேவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்பட்டால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அக்கட்சி சந்திரிகா அரசுக்கு மிரட்டல் விடுத்தது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு வெளிநாட்டு நிவாரண உதவியும் சென்றடையவில்லை. இதே நிலைநீடித்தால் மீண்டும் போர் வெடிக்கும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நிவாரணப் பொருட்களைஇணைந்து வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அது முறையாக நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகம்ஏற்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும். ஆனால் இன்னும் இலங்கை அரசு எந்தஉதவிகளையும் இதுவரை வழங்கவில்லை. இதனால் இலங்கை அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றார்.

இதற்கிடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்குவதில் நார்வே தூதுக்குழு தெரிவித்த யோசனைகளுக்குவிடுதலைப் புலிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்த விஷயத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டால் அது இலங்கையின்பிரிவினைக்குத் தான் வழிவகுக்கும் என்று சிங்கள அமைப்புக்கள் கூறுகின்றன. இதனால் புத்த மத தலைவர்களை சந்தித்து பேசியஅதிபர் சந்திரிகா, ஒப்பந்தம் கையெழுத்தானாலும் அது ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்காது என்று உறுதியளித்துள்ளார்.

இலங்கை அரசின் இந்த சுனாமி அரசியலால் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்ந்து பெரும் இன்னலில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+