அதிமுகவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
காவிரிப் பிரச்சினை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து முழு மூச்சாக போராடி வந்த இயக்கம், தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம். இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்ததை எதிர்த்தும், பம்புசெட்டுகளுக்கு மோட்டார்பொருத்துவதையும் கடுமையாக எதிர்த்து இச் சங்கம் போராட்டம் நடத்தியது.
டிராக்டர் வாங்க கடன் தொகை, மின்சார மோட்டார்களைப் புதுப்பிக்க ரூ. 6500 மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைதமிழக அரசு வழங்கி வருகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார் சிவசாமி நாயுடு.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது விவசாயிகளிடையே புதிய பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications