கும்மிடிப்பூண்டி: தலித் ஓட்டு யாருக்கு?
கும்மிடிப்பூண்டி:
தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளை கவருவதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கும்மிடிப்பூண்டியில் தலித் ஓட்டுக்கள் 30 சதவீத அளவுக்கு உள்ளது. இதனால், இந்த ஓட்டுக்களைப் பெற திமுக மற்றும் அதிமுகவேட்பாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இதுவரை தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளை எட்டிக் கூட பார்க்காத இரு கட்சிகளையும் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், இப்போதுகுடிசை குடிசையாக ஏறி இறங்கி ஓட்டு கேட்டு வருகின்றனர்.
திமுக அணியில் புரட்சி பாரதம் இருப்பதால், அந்தக் கட்சியைத் சேர்ந்த தலித் ஓட்டுக்கள் திமுக வேட்பாளருக்கு கிடைக்கும் எனஅக்கட்சி நம்புகிறது. அதேசமயம் தலித் மக்களிடையே செல்வாக்கு பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும்கணிசமான அளவுக்கு தலித்துகளின் வாக்குகளைப் பிரிப்பார் என்று கருதப்படுகிறது.
இப்படி தலித் ஓட்டுக்கள் பிரியும் வாய்ப்புகள் இருந்தாலும், தலித் மக்களிடையே தெளிவான நிலை காணப்படுகிறது.உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கே தங்களது வாக்கு என்பதில் தலித் மக்களில் பெரும்பாலானவர்களிடம் எண்ணம்நிலவுகிறது.
இத்தொகுதியில் உள்ள குடிசைவாசிகள், ரிக்ஷா ஒட்டுநர்கள், கூலி வேலை செய்பவர்களிடையே அதிமுகவுக்கு ஆதரவுஅமோகமாக காணப்படுகிறது. பெண்களிலும் அதிமுகவுக்கே ஆதரவு அதிகமாக காணப்படுகிறது.
மிகவும் பின் தங்கிய தொகுதியான கும்மிடிப்பூண்டியில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களை பெருவாரியாககவர்ந்துள்ளது அதிமுக. இதனால் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இரட்டை இலைக்கே வாக்களிப்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய வாக்கு வங்கியான, தலித்துகளின் வாக்குகளை முழுமையாகப் பெறுபவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications