கலாமின் நடவடிக்கையால் மின் இணைப்பு பெற்ற குடும்பம்
திருவனந்தபுரம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தலையீட்டால் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு மின் வசதி கிடைத்தது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அரூர் அருகே உள்ள ஏழுபுன்னா என்ற இடத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவருக்கு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
அந்தோணியின் மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென்றால் சுமார் 8 கிமீ தூரம் தனியாக மின் கம்பி போடவேண்டும். இதனால்அந்தோணியின் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காமல் மின் வாரியம் அலட்சியமாக இருந்தது.
தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி அந்தோணி, மாவட்ட கலெக்டர், மின் துறை அமைச்சர் உட்பட பலருக்கு மனுகொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. மின் வசதி கிடைக்காததால் அந்தோணியின் குழந்தைகளின் படிப்பும்பாதிக்கப்பட்டது.
இது குறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அந்தோணி ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்துப் பார்த்த கலாம்,உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தனது செயலர் சாமுவேலிடம் கூறினார்.
அவர் உடனடியாக கேரள தலைமை செயலரை தொடர்பு கொண்டு அந்தோணியின் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்குமாறுகூறினார். இதையடுத்து தலைமை செயலரின் உத்தரவுப்படி அடுத்து ஒரு சில நாட்களிலேயே அந்தோணியின் வீட்டுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டது.
இதனால் மகிழ்ச்சியடைந்த அந்தோணி, அப்பகுதியை சேர்ந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். மேலும் மின்இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்த குடியரசுத் தலைவர் கலாமுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications