கும்மிடிப்பூண்டியும் குடுமிப்பூண்டியும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியில் வேணுக்கு பதிலாக வெங்கடாசலபதியை நிறுத்தியதும், கும்மிடிப்பூண்டி குடுமிப்பூண்டியாகும் என்றுஎதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை என திமுக கோஷ்ப்பூசல் குறித்து கருணாநிதி பேசினார்.

திமுக வேட்பாளர் வெங்கடாசலபதிக்கு ஆதரவாக கும்மிடிப்பூண்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அக் கட்சியின் தலைவர்கருணாநிதி பேசியதாவது:

இந்தப் பொதுக் கூட்டம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆற்காடுவீராசாமியும் வீரபாண்டி ஆறுமுகமும், இந்தக் கூட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி தந்த இடத்துக்குப் பதிலாக வேறு இடத்தில்கூட்டம் நடத்துங்கள் என போலீசார் கூறுகிறார்கள்.

போலீசார் சொல்லும் இடத்தில் 1,000 பேர் கூடநிற்க முடியாது.. என்ன செய்யலாம் என்று கேட்டார்கள்.

அதற்கு நான், பரவாயில்லை.. நாங்கள் வந்துவிடுகிறோம். மேடையில் ஆளுக்கு ஒரு கறுப்புத் துணியை வாயில் கட்டிக் கொண்டுஉட்கார்ந்து விடுகிறோம். எங்களைப் பார்த்தாவது என்ன நடந்தது என்று மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

நான் பேசி வாங்கும் ஓட்டுக்களை பேசாமல் வாங்கவும் முடியும் என்றேன்.

இதைக் கேள்விப்பட்ட காவல்துறையினர் 2 மணி நேரம் கழித்து அனுமதி தந்தனர். இதையடுத்து அனுமதி தந்துவிட்டார்கள்,புறப்பட்டு வாங்கள் என்று வீரபாண்டியாரும் ஆற்காட்டாரும் அழைத்தனர்.

அனுமதி இல்லாவிட்டாலும் புறப்பட்டு வருபவன் தான் நான். இந்தக் கூட்டத்துக்கு வந்து கூட்ட நெரிசலில் சிக்கித் திணறுவதைத்தவிர்க்கவே போலீசார் இங்கே வரவே இல்லை என்று நினைக்கிறேன். அதற்காக போலீசுக்கு நன்றி.

கும்மிடிப்பூண்டியில் வேணுக்கு பதிலாக வெங்கடாசலபதியை நிறுத்தியதும், கும்மிடிப்பூண்டி குடுமிப்பூண்டியாகும் என்றுஎதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை. ஆகாது. ஆகவும் விடமாட்டோம். இரண்டு ஆடுகள் மோதினால் ரத்தம் குடிக்கலாம்என்று எந்த நரியாவது நினைத்தால் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தத் தொகுதியில் முன்பு வேணு திமுக எம்எல்ஏவாக இருந்தபோது தான் ரூ. 7 கோடியில் பெரியபாளையம் பாலம்கட்டப்பட்டது. தாமரைப்பாக்கத்தில் ரூ. 7 கோடியில் பாலம், ரூ. 4 கோடியில் ஆரணி பாலம் கட்டப்பட்டது. இதையெல்லாம்சொல்லித் தான் நாம் ஓட்டு கேட்கிறோம்.

ஆனால், 4 வருடம் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா இனிமேல் தொகுதிக்கு இதையெல்லாம் செய்யப் போகிறேன் என்று சொல்லிகேட்கிறார்.

ஆட்சியில் இருந்தாலும் உங்களுக்கு இதுவரை எந்த நன்மையையும் செய்யாத ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்டுங்கள்என்றார் கருணாநிதி.

வைகோ பேச்சு:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,

அதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்றால் ஒரே நாளில் 1.75 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கியது. மாணவிகளைபஸ்சில் உயிரோடு கொளுத்தியது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். அவர் நாட்டுக்காகவா உழைக்கிறார்? என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+