செங்கோட்டையனுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவின் எலெக்ஷன் ஸ்பெலிஸ்டான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் அவரை முதல்வர் ஜெயலலிதா ஓரம் கட்டியே வைத்திருக்கிறார். ஆனாலும் தேர்தல் நேரங்களில்செங்கோட்டையனின் உதவியை நாட ஜெயலலிதா தவறுவதில்லை.
இந் நிலையில் நேற்றிரவு அறநிலையத்துறை அமைச்சர் பிசி ராமசாமியுடன் காரில் சென்று கொண்டிருந்த செங்கோட்டையனுக்குதிடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தார் ராமசாமி.
அங்கு செங்கோட்டையனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்துள்ளதாகமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications