தொகுதிகளில் அமைச்சர்கள் பதுங்கல்: திமுக புகார்
காஞ்சிபுரம்:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, இன்பத் தமிழன், சோமசுந்தரம் ஆகியோர் காஞ்சிபுரம்மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் ரகசியமாக தங்கியுள்ளனர் என்று புகார் கூறப்பட்டுள்ளது.
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பேதொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளியேறி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம்உத்தரவிட்டிருந்தது.
தனியார் வாகனங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பணியை அவர்கள் செய்து வருகின்றனர் என்றுதனது மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல, அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, எம்.எல்.ஏ. சேகர் பாபு ஆகியோர் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குள்பதுங்கியருப்பதாகவும், வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பொருட்களை கொடுக்கும் பணியில் அவர்கள் மும்ரமாக இருப்பதாகவும்திமுக புகார் கூறியுள்ளது.
கும்மிடிப்பூண்டி எல்லைப் பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அரசியல் கட்சியினர் தங்கியிருப்பதாகவும்,கள்ள ஓட்டுப் போடுவதற்காக இவர்கள் பல்வேறு ரூபங்களில் தொகுதிக்குள் ஊடுறுவி வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
