காவிரி நடுவர் மன்றம்: மேலும் 1 ஆண்டு நீடிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் காவிரி நடுவர் மன்றம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்புசெய்யப்படவுள்ளது.

வருடக்கணக்கில் விசாரணை நடத்தி காலம் கடத்தி வரும் காவிரி நடுவர் மன்றத்தின் உறுப்பினராக உள்ள ஒரு நீதிபதி, கடந்தஆண்டே இறுதித் தீர்ப்பை வழங்கிவிடலாம் என முடிவெடுத்து வேகமாக செயல்பட்டார். ஆனால், மன்றத்தின் தலைவரான சிங்,தீர்ப்பை ஒத்தி வைத்துவிட்டார். இதற்கிடையே மன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க முடிவாகியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான தகராறை தீர்க்க 1990ம் ஆண்டு நடுவர் மன்றம்அமைக்கப்பட்டது. வரும் ஜூன் மாதத்துடன் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்திற்கு 256டிஎம்சி நீரை ஆண்டுதோறும் கர்நாடகம் விட வேண்டும் என்று இடையில் ஒரு இடைக்காலத் தீர்ப்பளித்ததோடு சரி.

அதன் பிறகு ஜவ்வாக விசாரணையை இழுத்து நடத்திக் கொண்டுள்ளது. இந் நிலையில் கடந்த 2001ம் ஆண்டில் நடுவர் மன்றம்தொடர்பாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி நடுவர் மன்றங்கள் 3 ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கையைதாக்கல் செய்து விடவேண்டும், அசாதாரணமான சூழ்நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கலாம் என்றும் அதில்கூறப்பட்டிருந்தது.

புதிய சட்டத்திருத்தத்தின் படி நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான காவிரி நடுவர் மன்றத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் வருகிறஆகஸ்டு 6ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இதனால் காவிரி நடுவர் மன்றம் மேலும் 1 ஆண்டுக்கு கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம்எழுதுமாறு பதிவாளருக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றம் 1990ம் ஆண்டே அமைக்கப்பட்டதால் புதிய சட்ட திருத்தம் அதற்குப் பொருந்தாது என்ற ஒரு கருத்துநிலவியது. ஆனால் அனைத்து நடுவர் மன்றங்களுக்கும் இது பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் மேலும் 1 ஆண்டு நீட்டிப்பு கோரியுள்ளது. தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகா மற்றும்கேரள அரசுகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+