ஜாதி மோதல் அபாயம்: புதிய தமிழகம், மூமுக நடை பயணத்துக்குத் தடை
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்குத் தேர்தல் நடத்தக் கோரி புதியதமிழகம் கட்சியும், இந்தத் தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக அறிவிக்கக் கோரி ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் இயங்கும்மூவேந்தர் முன்னேற்றக் கழகமும் ஏட்டிக்குப் போட்டியாய் நடத்துவதாக அறிவித்திருந்த நடை பயணங்களுக்கு போலீஸார்தடை விதித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட 3 தலித் பஞ்சாயத்துக்களிலும் கடந்த 9 ஆண்டுகளாக தலைவர் பதவி காலியாக உள்ளது. தலித்துகள் தங்களுக்குதலைவராக வருவதை இந்த 3 பஞ்சாயத்துக்களையும் சேர்ந்த தேவர் சமூகத்தினர் ஏற்க மறுத்து வருவதால் தலைவர் பதவிக்குஉருப்படியாக ஒருவரும் வர முடியவில்லை.
இதேபோல, ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் இயங்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில், 3 பஞ்சாயத்துக்களையும்தலித் பஞ்சாயத்துகள் என்பதற்குப் பதிலாக, பொதுத் தொகுதிகளாக மாற்றக் கோரி 17ம் தேதி உசிலம்பட்டியில் இருந்து நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக அதன் தலைவர் வாண்டையார் அறிவித்திருந்தார்.
இருவரும் இதற்கான அனுமதி கோரி உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் மனு செய்திருந்தனர்.
இந்த ஊர்வலங்களால் ஜாதிக் கலவரம் வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டதால், உசிலம்பட்டி தாலுகாவில் 144 போலீஸ்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோர் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தடையுத்தரவை மீறி யாராவது உசிலம்பட்டிக்குள் பேரணியாக செல்ல முயன்றால், எல்லையிலேயே கைது செய்யப்படுவார்கள்என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications