ஸ்டாலின் வெளியேற்றம்: அமைச்சர்கள் பதுங்கல்
காஞ்சிபுரம்:
தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக காஞ்சிபுரம் தொகுதியில் தங்கியிருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்மற்றும் முன்னாள் திமுக அமைச்சர்கள் ஆகியோர் போலீஸாரின் கடும் எச்சரிக்கையையடுத்து அங்கிருந்து வெளியேறினர்.
அதே நேரத்தில் தமிழக அமைச்சர்கள் தொகுதிகளுக்குள் பதுங்கியிருந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாகவும் அவர்களைபோலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
அதை ஏற்று பலர் வெளியேறினாலும், சிலர் தொகுதிக்குள்ளேயே பதுங்கியிருப்பதாக தேர்தல் சிறப்பு பார்வையாளர்கே.ஜே.ராவிடம் புகார் கூறப்பட்டது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் முடிவடைந்தவுடன், கிராமம் கிராமமாக சென்று ராவ்சோதனையிட்டார்.
கல்யாண மண்டபங்கள், அரசு விருந்தினர் இல்லம், விடுதிகள் ஆகியவற்றிலும் அவர் சோதனை நடத்தினார்.
பணப்பாக்கம் கிராமத்திற்குச் சென்ற ராவ் வீடுகளில் தங்கியிருப்போரிடம் ரேஷன் கார்டுகளை வாங்கிப் பார்த்து அவர்கள் அதேஊரைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து ஆய்வு நடத்தினார். கவரைப்பேட்டை பகுதியிலும் அவர் வீடு வீடாக சென்றுசோதனையிட்டார்.
அப்போது அங்கிருந்த வெளியாட்களை உடனே வெளியேற வைத்தார்.
இந்த சோதனைக்குப் பின்னர் ஆட்சித் தலைவர் வெங்கடேசன், எஸ்.பி. சமுத்திரப்பாண்டி உள்ளிட்டோருடன் ஆலோசனைநடத்திய ராவ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கலாம். அதற்குரிய முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்குத்தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து கொடுத்துள்ளது என்றார் ராவ்.
இதற்கிடையே, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் திமுக அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி,கே.என்.நேரு, முல்லை வேந்தன் ஆகியோர் தொடர்ந்து தொகுதிக்குள் தங்கியிருந்தனர்.
இதையடுத்து ஸ்டாலின் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.அதேபோல, முன்னாள் அமைச்சர்களையும் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் அவர்கள் வெளியேற முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்தனர். வெளியேற மறுத்தால் பிடித்து உள்ளே போடுவோம்என போலீஸார் எச்சரிக்கவே, அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறுவதாக கூறி விட்டுக் கிளம்பிச் சென்றனர்.
ஆனால், அமைச்சர்களும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தொகுதிக்குள்ளேயே பதுங்கியிருந்து தேர்தல் வேலைகளில்ஈடுபட்டு வந்ததாகவும் அதை போலீசார் தடுக்கவில்லை என்றும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு எனவும், அமைச்சர்கள் எந்த இடத்தில் உள்ளார்கள் என்ற விவரத்தை தேர்தல் கமிஷனிடம்தெரிவித்துவிட்டதாகவும் நிதியமைச்சர் பொன்னையன் கூறினார்.












Click it and Unblock the Notifications