ஓடிப் போய் திரும்பி வந்த ஓமலூர் டி.எஸ்.பி. சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்னம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போனது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி அவருக்கு உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னாநோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பணியிலிருந்போது எஸ்பி பொன் மாணிக்கவேல் திட்டியதால் ஜீப், துப்பாக்கியை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு ஓடிப் போனமணிரத்னத்தை 19 தனிப்படைகள் அமைத்துத் தேடிக் கண்டுபிடித்தது தமிழக காவல்துறை.

19 நாள் தேடுதலுக்குப் பிறகு சத்தியமங்கலம் அருகே வைத்து அவரை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்ததாக அரசுகூறினாலும், அவரே திரும்பி வந்துவிட்டார் என்று அவரது நண்பர்களும் கூறுகின்றனர்.

தற்கொலை மிரட்டல் எல்லாம் விடுத்துவிட்டு திரும்பி வந்த டிஎஸ்பி சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, டி.ஜி.பி.அலெக்சாண்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய அலெக்சாண்டர், மணிரத்னத்தை மீண்டும்பணியில் சேர்க்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மகிழ்ச்சியுடன் சேலம் திரும்பிய மணிரத்னம், புதிய எஸ்.பி. ஆறுமுகத்தை சந்தித்து முறைப்படி பணியில் சேர்ந்தார்.அவருக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எஸ்.பி. ஆறுமுகம், பணியில் இருந்துஓடிப் போனதற்கு மணிரத்னம் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந் நிலையில், இன்று மணிரத்னம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பணியில் இருந்தபோது திடீரென தலைமறைவானதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மணிரத்னத்திற்கு உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.

சேலம் எஸ்பியாக இருந்து இப்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பொன்.மாணிக்கவேல் நேர்மைக்குப் பெயர் போனவர்.மன்னார்குடி ஆட்களின் ஆசி பெற்றவர். ஆனாலும், லஞ்சம் வாங்காத அதிசய போலீஸ் அதிகாரி.

சஸ்பெண்ட் ஆகியுள்ள மணிரத்னத்துக்கு இனிமேல் தான் பிரச்சனையே..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+