காஞ்சியில் 65%, கும்மிடிப்பூண்டியில் 70% வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி:

காஞ்சிபுரத்திலும் கும்மிடிப்பூண்டியிலும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு மிக அமைதியாக நடந்து முடிந்தது.

காஞ்சிபுரத்தில் 65 சதவீதமும், கும்மிடிப்பூண்டியில் 55 சதவீத வாக்குகளும் பதிவானதாக முதலில் கூறப்பட்டது. பிறகு இரவில்காஞ்சியில் 65 சதவீதமும், கும்மிடிப்பூண்டியில் 70 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

மத்தியப் பாதுகாப்புப் படைகளின் வருகையாலும், தேர்தல் சிறப்புப் பார்வையாளர் கே.ஜே.ராவின் அதிரடி நடவடிக்கைகளாலும்காஞ்சி, கும்மிடிப்பூண்டியில் மிக அமைதியாக வாக்குப் பதிவு நடந்தது.

வழக்கமாக அதிமுகவுக்குத் துணைபோகும் போலீசார் ராவின் எச்சரிக்கையால் இம்முறை அடக்கி வாசித்தால், முறைகேடுகள்,வாக்குச் சாவடிக்குள் கலாட்டா ஆகியவை தவிர்க்கப்பட்டன.

அதே போல கள்ள ஓட்டு போடுவதில் ஸ்பெஷலிஸ்டுகளான திமுகவினருக்கும் ராவ் ஆப்பு வைத்துவிட்டார். இதனால், கள்ளஓட்டுக்களும் பெருமளவில் தடுக்கப்பட்டுவிட்டன.

இன்று காலை முதல் கும்மிடிப்பூண்டி தொகுதியை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார் ராவ்.

கும்மிடியில் பெரியபாளையத்தில் 3 வாக்குச் சாவடிகளிலும், கண்டிகை பகுதியில் ஒரு வாக்குச் சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த ராவ், எதனால் கோளாறு ஏற்பட்டது என்பதைவிசாரித்தார். கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரம் அங்கு வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் காலை முதலே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால், கும்மிடிப்பூண்டியில் ஆரம்பத்தில்இருந்தே வாக்குப் பதிவு மந்தகதியில் தான் இருந்தது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வாக்குப் பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுஏராளமான வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால்பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

ஆனால் இந்த முறை அந்தப் பிரச்சினை எழவில்லை. முறையான ஆவணங்களுடன் வாக்களிக்கச் சென்ற அனைவருமே தங்களதுவாக்குகளை செலுத்தி விட்டு வெளியே வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+