பிஇ விடைத்தாள் மோசடி: மாணவியும் சிக்குகிறார்
சென்னை:
பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வு விடைத்தாள் திருத்த மோசடியில் ஒரு மாணவி உள்பட 41 மாணவர்களுக்கு தொடர்புஇருப்பதாக மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வு விடைத் தாள்களைத் திருடி அதை திருத்தி மோசடி செய்ததாக 3 தனியார் சுய நிதிப்பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 11 மாணவர்களையும், 3 அண்ணா பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களையும் போலீஸார்கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெயராமன் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு பட்டியலைக்கொடுத்துள்ளார். அதில் விடைத்தாள் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள மாணவர்களின் முழு விவரமும் இடம் பெற்றுள்ளது.
மொத்தம் 41 மாணவர்கள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜெயராமன் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருமாணவியும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலை போலீஸார் தற்போது பரிசீலனை செய்து வருகிறார்கள். இவர்களது குற்றத்திற்கு ஆதாரங்கள் இருப்பதுதெரியவந்தால் 41 பேரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைதாவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications