திருப்பதி: தரிசனத்திற்கு 70 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் 70 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத அளவிற்கு இங்கு பக்தர்கர்கள் குவிகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் சுமார் 50 மணி நேரம் காத்துக் கிடந்தார்கள். நேற்று கூட்டம்மேலும் அதிகரித்தது. இதனால் நேற்று பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 70 மணி நேரம் ஆனது.

தரிசனத்துக்கு வந்த அனைவரும் இரவில் கோவிலுக்கு வெளியேயும் காத்து நின்றனர். இதனால் பக்தர்கள் விரைவாக தரிசனம்செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தினமும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.விடுதிகளில் அறை கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+