விடைத்தாள் மோசடி: மாணவர்களின் வீடுகளில் சோதனை நடத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொறியியல் கல்லூரி விடைத்தாள் மோசடி தொடர்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் வீடுகளில் சோதனை நடத்தபோலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்கள் 3 பேரின் உதவியுடன் பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கானவிடைத்தாளை திருடி, அதில் திருத்தம் செய்ததாக 11 மாணவர்கள் உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த மோசடியில் 41 மாணவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தமாணவர்களின் பட்டியலையும் போலீஸாரிடம் அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்துள்ளது.

இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களை விசாரிக்க கல்லூரியைஅணுகியபோது அவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த மாணவர்களின் வீட்டு முகவரியை சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலிருந்து பெற்று அவர்களின் வீடுகளுக்குச்சென்று சோதனை நடத்தி, மாணவர்களிடமும், அவர்களது பெற்றோரிடமும் விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார்முடிவு செய்துள்ளனர்.

இதேபோல விடைத்தாள் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் படித்துவந்த 5 கல்லூரிகளின் நிர்வாகிகளிடமும் தொடர்ந்துவிசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். மொத்தம் 158 விடைத்தாள்கள் மோசடி செய்து திருத்தப்பட்டுள்ளதாகதெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+