கூட்டணி கட்சிகளால் உயிருக்கு ஆபத்து: சந்திரிகா
கண்டி:
சுனாமி நிவாரணப் பொருட்களை அளிப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள நான்முடிவெடுத்துள்ளதால் என்னுடைய கூட்டணி கட்சிகளாலேயே எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன் என்றுஇலங்கை அதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.
சுனாமியால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும் தமிழகளின் வடக்கு, கிழக்கு பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன.ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகளை செய்வதில் இலங்கை அரசு மெத்தனம் காட்டியது.
ஆனால், அதை தமிழர் பகுதி மறு கட்டமைப்புக்கு வழங்குவதிலும் இலங்கை அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது. இதைபுலிகள் வன்மையாக கண்டித்ததோடு, மீண்டும் போர் மூளும் என எச்சரித்திருந்தன.
இதைத் தொடர்ந்து இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வது எனதீர்மானிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை நார்வே முன்னின்று செய்தது. ஆனால், இதற்கு அதிபர் சந்திரிகாவின் கூட்டணிக்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று எச்சரித்தன.குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பிரமுனா தான் சந்திரிகா அரசுக்கு கடும் மிரட்டல் விடுத்தது.
இந் நிலையில் இலங்கைக்கு சுனாமி நிவாரண உதவி வழங்கும் நாடுகள் கலந்து கொண்ட கூட்டம் கண்டியில் நடைபெற்றது.இதில் அதிபர் சந்திரிகா பேசுகையில், சுனாமி நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம்செய்ய தீர்மானித்துள்ளதால் எனக்கும், என்னுடன் இருப்பவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஆபத்து எனக்கு வெளியில் இருந்து வர வாய்ப்பில்லை. எனது கூட்டணிக் கட்சிகளால் ஆபத்து ஏற்படப் போகிறது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications