ஜெயலட்சுமியின் பாதுகாப்புக்கு ரூ. 14 லட்சம் செலவு!
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கிய வகையில் அரசுக்கு இதுவரை ரூ. 14 லட்சம் செலவாகியுள்ளதாகமதுரை நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த மனு நீதிபதி அய்யாச்சாமி முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில்தென்மண்டல ஐஜி திரிபாதி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ஜெயலட்சுமி தனது மனுவில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளது கற்பனை கதையாகும். அவருக்கு ஏதேனும்பாதுகாப்பு தேவைப்பட்டால் அவரது சொந்த செலவிலேயே தனியார் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஜெயலட்சுமிக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதால் பொதுமக்களின் பணம் அதிக அளவில் விரயமாகிறதுஇதுவரை ஜெயலட்சுமிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பால் அரசுப் பணம் பல லட்சம் செலவாகியுள்ளது. இதனால்ஜெயலட்சுமிக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறவேண்டும் என்று என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதில் மனுவை படித்துப் பார்க்க கால அவகாசம் வேண்டும் என்று ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் கேட்டனர். இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணையை இன்றைய தேதிக்கு (17ம் தேதி) நீதிபதி அய்யாச்சாமி தள்ளி வைத்தார்.
இதையடுத்து இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பு வழங்கிய வகையில்அரசுக்கு இதுவரை ரூ.14 லட்சம் செலவாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஜெயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேசன் வாதிடுகையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றஉத்தரவுப்படிதான் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலட்சுமிக்கு இன்னும் ஆபத்து நீங்கவில்லை. போலீஸ்பாதுகாப்பு இருந்தபோதே அவர் 3 முறை தாக்கப்பட்டுள்ளார்.
வழக்கில் அவர் முக்கிய சாட்சியாகவும் உள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்கவேண்டும். ஜெயலட்சுமி கூறிய குற்றச்சாட்டில் போலீஸ் அதிகாரிகளே எதிரிகளாக உள்ளனர்.
சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஜெயலட்சுமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதை வைத்து அவரை குற்றவாளிஎன்று கூற முடியாது. அவரது குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் போலீசாருக்கு எதிரான முக்கிய சாட்சியாக ஜெயலட்சுமிஉள்ளார்.
எனவே அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறக்கூடாது. அப்படி விலக்கிக் கொண்டால் அவரது எதிரிகள்அவரை அடித்தே கொன்று விடுவார்கள் என்றார்.
அதற்கு போலீஸ் தரப்பு வழக்கறிஞர் பதில் அளிக்கையில், ஜெயலட்சுமி உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. கடந்த செப்டம்பர்மாதம் முதல் இதுவரை போலீஸ் பாதுகாப்பு கொடுத்த வகையில் (பெட்ரோல் செலவு சேர்க்காமல்) ரூ. 14 லட்சம்செலவாகியுள்ளது. தேவைப்பட்டால் பணம் கட்டி தனியார் பாதுகாப்பை ஜெயலட்சுமி ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அய்யாச்சாமி, மாலையில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications