காசு வாங்கிய வாக்காளர்கள்: கருணாநிதி எரிச்சல்
சென்னை:
இடைத் தேர்தலில் அதிமுகவுக்குக் கிடைத்துள்ள வெற்றி, கோடிகளை செலவிட்டதால்தான் என்று வெற்றி பெற்றவர்களுக்கும்,அவர்கள் கொடுத்த காசை வாங்கிய வாக்காளர்களுக்கும் நன்கு தெரியும் என்று திமுக தலைவர் கருணாநதி கூறியுள்ளார். கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்.
அதில், திமு கழக உடன் பிறப்புகளுக்கும், நமது கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைகாணிக்கையாக்கிடவே இந்த அறிக்கை வெளியிடுகிறேன்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஏற்கனவே தங்கள் வசம் இருந்த இடங்களைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.
தேர்தல் விதிகளை மீறி, ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அரசாங்க பணத்தையே செலவிட்டு இருதொகுதிகளிலும் வசதிகள் செய்திட, சில கோடி ரூபாய்களை செலவழித்தும் போதாமல்,
அடிப்பது போல் அடி, நாங்கள் அழுவது போல அழுது எங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறோம் என்ற சூழ்ச்சியில்ஈடுபட்டும், இந்த வெற்றியை அதிமுகவால் பெற முடிந்தது என்ற உண்மை வாக்களித்தவர்களுக்கும், வெற்றிபெற்றவர்களுக்கும் அவர்களை வாழ்த்துகிறவர்களுக்கும் நன்றாகவே தெரியும் என்பது நமக்கும் தெரியும்.
100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஒவ்வொரு வாக்காளருக்கும் கொடுத்தே இந்த வெற்றியை அவர்களால் பெறமுடிந்திருக்கிறது.
ஜனநாயக கடமையாற்ற இரு தொகுதிகளிலும் இரவு, பகல் பாராது அயராது உழைத்திட்ட நமது முற்போக்கு அணியின் செயல்வீரர்கள் அனைவருக்கும் இந்த அணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த பெருமக்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியைக்கூறுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications