தேர்தல் தோல்வி: கூடுகிறது திமுக செயற்குழு!
சென்னை:
இடைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது குறித்து விவாதிக்க அக் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் ஜூன் 2ம்தேதி கூட்டப்பட்டுள்ளது.
இதில் அனைத்து தலைமை செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்திடும் தூய பணிகள்: கருணாநிதி
இதற்கிடையே சட்டசபை இடைத் தேர்தலில் திமுக தோல்வியுற்றாலும், தூய பணிகளை திமுகவினர் தொடர்ந்துமேற்கொள்வார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் வெற்றி பெற ஆளுங்கட்சியினர்எத்தனை கோடிகளை செலவழித்தார்கள் என்பதும், எந்த அளவுக்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள் என்பதும்அனைவருக்கும் தெரியும், குறிப்பாக வெற்றி பெற்றவர்களுக்காக வாக்களித்தவர்களுக்குத் தெயும்.
1967க்குப் பிறகு தமிழகத்தில் மிகப் பெரும் மொழிப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் நடந்த தர்மபுரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வியுற்றார். ஆனால் அதன் பின்னர் வந்த பொதுத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுஅண்ணா தலைமையில் ஆட்சி அமைத்ததை வரலாறு கூறும்.
இந்த இடைத் தேர்தல் வெற்றி அதிமுக ஆட்சி குறித்த கருத்துக் கணிப்பாக அமையாது.
இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைப் பாராட்டி ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுதெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தாம் மட்டுமே தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக தம்பட்டம் அடித்துள்ளார் அம்மையார்.
திமுகவைப் பொருத்தவரை தோழமைக் கட்சியினரையும் மதித்து, திமுக மாநாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளச் செய்து வருகிறது. அதுதான் திமுகவின் பண்பாடு, பழக்கம்.
தேர்தல் வெற்றி தொடர்பாக அம்மையார் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் ஆணவமே தலை தூக்கி நிற்கிறது. எது எப்படிஇருந்தாலும் திமுகவினரின் தூய பணிகள் தொடர்ந்து நடந்திடும். வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் கோவை மண்டல மாநாடுமிகச் சிறப்பாக வெற்றிகரமாக நடந்திடும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications