ஐநா பாதுகாப்பு சபை: இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் கூட்டணி-சீனா எதிர்ப்பு
ஐநா:
ஐநா பாதுகாப்பு சபையை விரிவுபடுத்தி அதில் தங்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று இந்தியா,பிரேஸில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் ஐநாவில் உள்ள ஜெர்மனியின் தூதரக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த 4 நாடுகளும் கலந்து கொண்டன.இந்தக் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐநாவில் இந்த நான்கு நாடுகளும் சுற்றுக்கு விட்டுள்ளன.
அதில், ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15லிருந்து 25 ஆக உயர்த்த வேண்டும். நிரந்தரஉறுப்பினர்களின் எண்ணிக்கையை 5ல் இருந்து 9 ஆக உயர்த்த வேண்டும்
ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவிலிருந்து தலா ஒரு நாட்டையும் நிரந்தர உறுப்பினர்களாக்கும்வகையில் இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி மற்றும் இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்கவேண்டும்.
புதிதாக சேர்க்கப்படும் உறுப்பினர்களுக்கும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற தற்போதுள்ள நிரந்தரஉறுப்பினர்களின் அதிகாரம் (வீடோ பவர் உள்ளிட்டவை) வழங்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
சீனா எதிர்ப்பு:
இதற்கிடையே இந்த 4 நாடுகளின் கோரிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பீஜிங்கில் சீன வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் காங் குவான் இன்று நிருபர்களிடம் கூறுகையில், இந்தியா உட்பட 4 நாடுகள் தங்களுக்கு ஐநா பாதுகாப்புசபையில் நிரந்தர அந்தஸ்து கோரியிருப்பது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
இதனால் பாதுகாப்பு சபை விரிவாக்கத்தின் போது நியாயமாக நடக்க வேண்டிய காரியங்கள் தடைபடும் வாய்ப்பு உள்ளது.
வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளில் ஒன்றாக சீனாவும் உள்ளது. ஐநா பாதுகாப்பு சபை விரிவுபடுத்தும் விஷயத்தில்சீனாவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என்றார்.












Click it and Unblock the Notifications