தேர்தல் தோல்வியால் கூட்டணியில் பிளவு வராது: கருணாநிதி
டெல்லி:
சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்வியுற்றதால், திமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணியில் விரிசலோ,பாதிப்போ ஏற்படாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்து ஒரு வருடம் ஆகிறது. இதையொட்டி கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லி சென்ற கருணாநிதி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள்பெரிய அளவில் விவாதிக்கப்படக் கூடிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவை அல்ல. அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.
இந்த முடிவினால் தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் (7 கட்சி கூட்டணி) பிளவு ஏற்படாது, பாதிப்பும் ஏற்படாது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டணிக் கட்சியினருடன் விரைவில் விவாதிப்பேன் என்றார் கருணாநிதி.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அது குறித்து தான்இன்னும் கணிக்கவில்லை என்றார் கருணாநிதி.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தது. அதன் பேரில் செல்கிறேன். கடந்த ஒரு ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமயிலானமத்திய அரசு பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. இதற்காகப் பிரதமரை பாராட்டுவேன் என்றார்.
வரும் 22ம் தேதி டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஓராண்டு நிறைவு விழாப் பொதுக் கூட்டமும் பேரணியும்நடக்கிறது. இதில் ராமதாஸ் பங்கேற்கிறார். ஆனால், கருணாநிதி பங்கேற்க மாட்டார் என்றே தெரிகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அமெரிக்காவில் உள்ளதால் அவரும் இக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை.
இந்த கொண்டாட்டத்தில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிக்கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications