இலங்கை செல்ல முயன்ற 9 அகதிகள் கடலில் மூழ்கி பலி
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து கள்ளப் படகு மூலம் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த 9 இலங்கைத் தமிழர்கள் கடலில் மூழ்கிபரிதாபமாக இறந்தனர்.
இலங்கையில் அமைதி திரும்பி வரும் நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப ஆர்வம்கொண்டுள்ளனர். இருப்பினும் இவர்களை திருப்பி அழைத்துக் கொள்வது குறித்து இதுவரை இலங்கை அரசு உறுதியான முடிவைஅறிவிக்காமல் உள்ளது.
இந் நிலையில், கடந்த 14ம் தேதி பாம்பன் அருகே உள்ள குந்துகால் கடல் பகுதியிலிருந்து 17 இலங்கைத் தமிழர்கள் படகுஒன்றில் இலங்கைக்கு சென்று கொண்டிருந்தனர். இரு நாட்டு கடல் படையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பி இலங்கைஎல்லைக்குள் நுழைந்த அவர்களது படகு, ஒன்றாம் தீடை என்ற மணல் திட்டு அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த 17 பேரும் கடலில் மூழ்கினர். இதைப் பார்த்ததும், இலங்கை மீனவர்கள் விரைந்து வந்து கடலில்மூழ்கியவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாகஇறந்தனர். 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்னொருவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மீட்கப்பட்ட 7 பேரும் தலைமன்னார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications