செல்போன்: இனி தமிழகம் முழுவதும் லோக்கல் கட்டணம் !

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்னைக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் இடையிலான மொபைல் போன் அழைப்புகள் இனிமேல் லோக்கல் காலாகவேகருதப்படும். இந்த அழைப்புகளுக்கான எஸ்டிடி கட்டணம், ரோமிங் கட்டணம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அறிவித்துள்ளார்.

செல்போனில் இருந்து செல்போனுக்கு பேசுவோருக்கும், சாதாரண தொலைபேசியில் இருந்து செல்போனுக்கு பேசுவோருக்கும் மட்டுமேஇது பொருந்தும்.

இந்தச் சலுகை மே 25ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கும் செல்போனில் இதுவரைஎஸ்டிடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

அதே போல ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு (சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு, அல்லது மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து சென்னைக்கு) செல்போனை கொண்டு சென்று பயன்படுத்துவோர் ரோமிங் கட்டணமும் செலுத்த வேண்டி உள்ளது.

இனிமேல் தமிழகத்துக்குள் எந்தப் பகுதியில் இருந்தும் எந்தப் பகுதியிலும் செல்போன்களில் பேச லோக்கல் கால் கட்டணமேவசூலிக்கப்படும். அதே போல தமிழகத்துக்குள் செல்போன்களை எங்கு எடுத்துச் சென்று பயன்படுத்தினாலும் ரோமிங் கட்டணம்தேவையில்லை.

இந்த சலுகை தமிழகத்துக்கு மட்டுமின்றி மும்பைக்கும்- மகாராஷ்டிரத்தின் பிற பகுதிகளுக்கு இடையிலும், கொல்கத்தாவுக்கும்- மேற்குவங்காளத்தின் பிற பகுதிகளுக்கு இடையிலும், உத்தரப் பிரதேசம் முழுமைக்கும் அமலாகிறது.

இதன்மூலம் செல்போன் உபயோகிப்பாளர்களுக்கு ரோமிங் மற்றும் எஸ்டிடி கட்டணம் மிஞ்சும்.

செல்போனில் இருந்து செல்போனுக்கு பேசுவோருக்கும், சாதாரண தொலைபேசியில் இருந்து செல்போனுக்கு பேசுவோருக்கும் மட்டுமேஇது பொருந்தும். இந்தச் சலுகை மே 25ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றார் தயாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+