விடைத்தாள் மோசடி: மேலும் 3 மாணவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பி.இ.விடைத்தாள் மோசடி தொடர்பாக மேலும் 3 மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாளை திருடி மோசடி செய்ததாக 11 மாணவர்கள் மற்றும் 3 பல்கலைக்கழகஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 5 கல்லூரிகளை சேர்ந்த மேலும் 41மாணவர்களுக்கு விடைத்தாள் மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த 5 கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்களை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்துவந்தனர்.

இந் நிலையில் 3 மாணவர்களை போலீஸார் இன்று கைது செய்தனர். கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும்வியாசர்பாடியை சேர்ந்த நிக்ர முல்லாகான், வள்ளியம்மை என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் அஷோக் நகரை சேர்ந்த அஜய்சித்தார்த், தாம்பரத்தை சேர்ந்த கிறிஸ்டபர் ஆண்டனி ஆகிய 3 பேரும் இன்று போலீஸ் பிடியில் சிக்கினார்கள்.

அஜய் சித்தார்த், கிறிஸ்டோபர் ஆகியோர் ஒரு பாடத்திற்கும், நிக்ர முல்லாகான் 2 பாடங்களுக்கும் விடைத்தாளை திருத்தபல்கலைக்கழக ஊழியர் தாமஸ் என்பவரிடம் தலா ரூ.4,000 பணம் கொடுத்ததாக போலீஸிடம் கூறினார்கள்.

மாணவர்கள் 3 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+