விளம்பரப் பலகையில் தொங்கிய வாலிபர் பிணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், விளம்பரப் பலகையில் மின்சாரம் தாக்கியதால், பலியான வாலிபரின் பிணம், பல மணி நேரம் விளம்பரப்பலகையிலேயே தொங்கியபடி கிடந்தது. பின்னர் போலீஸார் வந்து உடலை மீட்டனர்.

அண்ணா சாலை காயிதே மில்லத் கல்லூரிக்கு அருகே விளம்பரப் பலகை ஒன்றில் விழுப்புரம் மாவட்டம் ஆசூர் கிராமத்தைச்சேர்ந்த வேலு என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது விளம்பரப் பலகையில் மின்சாரம் பாய்ந்து வேலு துடிதுடித்து இறந்தார். பிணமான நிலையில் அப்படியே விளம்பரப்பலகையிலேயே பல மணிநேரம் தொங்கிய நிலையில் இருந்தார்.

வேலு இறந்தது யாருக்கும் தெரியவில்லை. விளம்பரம் வரையும் வேலையில் வேலு ஈடுபட்டிருப்பது போலவே பார்ப்பதற்குத்தெரிந்ததால், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களுக்கும், வேலு பிணமாக தொங்கியது தெரியவில்லை.

ஆனால் பல மணி நேரமாக வேலு ஒரே நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த சிலர் போலீஸாருக்குத் தகவல்கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது தான் வேலு இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலைப்போலீஸார் கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+