1 ஆண்டு நிறைவு: பிரதமரின் இல்லத்தில் இன்று விழா
டெல்லி:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்று இன்றுடன் 1 ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி இன்றுமாலை பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் விழா நடைபெறுகிறது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்று இன்றுடன் 1 ஆண்டு நிறைவு பெறுகிறது.இதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் இன்று மாலை விழா நடைபெறுகிறது.
இதற்கிடையே இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று மத்திய அரசுக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிக்கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் விடுத்த அழைப்பையும் இடதுசாரிக் கட்சிகள்நிராகரித்து விட்டன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 1 ஆண்டு நிறைவு விழாவில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம். இது ஏற்கனவேஎடுக்கப்பட்ட முடிவு என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜாமற்றும் புரட்சி சோஷலிஸ்ட் செயலாளர் அபானி ராய் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications